செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 தமிழகம்    இந்தியா    உலகம்    இலங்கை    விளையாட்டு    வர்த்தகம்
 முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்

லாரிகள் ஸ்டிரைக் இன்று நள்ளிரவு தொடக்கம்
செவ்வாய்க்கிழமை, ஜூலை 1, 2008   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

நாமக்கல்: நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகை லாரிகளின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்குகிறது. தமிழகத்திலும் ஸ்டிரைக் மேற்கொள்ளப்படவுள்ளதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சாதாரண பெட்ரோல், டீசல் சப்ளையை தொடர வேண்டும், சேவை வரியை நீக்க வேண்டும், பழைய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க வரியை நீக்க வேண்டும், புதிய சாலைகளில்சுங்க வரியை வசூலிக்க கமிட்டியை நியமித்து அதில் லாரி உரிமையாளர்களையும் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்ைத தொடங்குகின்றனர்.

இந்தப் போராட்டத்திற்கு தென் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இப்போராட்டத்ைத வெற்றிகரமாக நடத்துவது என சேலத்தில் நடந்த தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநில லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதன் காரணமாக இந்த மாநிலங்களில் சுமார் 5 லட்சம் லாரிகள் ஓடாது. இருப்பினும் பால், குடிநீர், மருந்து உள்ளிட்டவற்றை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் ஏந்திச் செல்லும் டேங்கர் லாரிகள், எல்.பி.ஜி டேங்கர் லாரிகள், மணல் லாரிகள், சரக்கு லாரிகள், வேன்கள் என அனைத்து வாகனங்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளன. இதனால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பெருமளவில் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காய்கறிகள், அரிசி, பருப்பு, சமையல் எண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப்ப பொருட்களின் விலை கிடுகிடுவென உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


 User Comments
[ Post Comments ]
By: ram     On: 01 Jul 2008 08:32 pm

the govt should take necessary step to stop this strike.
பதில் |  அவதூறு குறித்து தகவல் தர

[ கருத்தை பதிவு செய்யுங்கள் ]






Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India