clear
clear
clear
x

ஸ்ரீநகர் அருகே கண்ணி வெடித் தாக்குதலுக்கு 8 வீரர்கள் பலி

சனிக்கிழமை, ஜூலை 19, 2008, 18:05[IST]
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் அருகே நர்பால் என்ற இடத்தில் இன்று நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

ஸ்ரீநகர் - பாரமுல்லா சாலையில் இன்று பிற்பகல் இந்த பயங்கர சம்பவம் நடந்தது. தீவிரவாதிகள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் குண்டை வெடிக்கச் செய்துள்ளனர்.

அப்போது அந்த சாலை வழியாக பாதுகாப்புப் படை வீரர்களுடன் வந்த பேருந்து இதில் சிக்கி சேதமடைந்தது.

சம்பவ இடத்திலேயே 8 வீரர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.


User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: தமிழன்
பதிவு செய்தது: 20 Jul 2008 12:03 pm
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.தன் வினை தன்னைசுடும்,அயலவனுக்கு தலைவலி கொடுத்தால் தனக்கு கவாலைக்குத்து வரும் என்பது இதுதான்.

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!