செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 தமிழகம்    இந்தியா    உலகம்    இலங்கை    விளையாட்டு    வர்த்தகம்
 முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்

ராஜீவ் 64வது பிறந்த நாள்-தலைவர்கள் அஞ்சலி
புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

டெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 64வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. ராஜீவ் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித் உள்ளிட்டோரும் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

சோனியா காந்தியுடன், மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் இரு குழந்தைகளும் உடன் வந்திருந்தனர்.

ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் மத நல்லிணக்க நாளாக இன்று கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் பெரும் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: தமிழ் இன உணர்வு    பதிவு செய்தது: 21 Aug 2008 03:38 am

ராஜீவ் காந்தி என்னும் ஓர் உயிருக்காக லட்சக்கணக்கான தமிழ் மக்களின் சுதந்திரமும் , சுயசார்பும் அவர்களின் ரத்தமும் விலையா என்ற கேள்வி மட்டும் எஞ்சி நிற்கிறது!!

எல்லாவிதத்திலும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் சிங்களத்தின் உத்தரவுக்கு காத்திருக்கும் இந்தியாவின் எம்.கே.நாராயணன்கள்

அன்றாடம் தமது மீனவர்களை சுட்டுத்தள்ளும் சிங்களத்திற்கு அரச விருந்தாளியாய் போய் வரும் நமது இந்தியப்பிரதமர்.

ஐயா, ராஜீவ் காந்திக்கு மட்டுமா உயிர் இருந்தது?நமது மீனவர்க்கு இல்லயா?






Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India