மூத்த அதிகாரி செக்ஸ் டார்ச்சர்-'ரா' பெண் அதிகாரி தற்கொலை முயற்சி புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
டெல்லி: மூத்த அதிகாரியால் செக்ஸ் டார்ச்சருக்கு உள்ளாக்கப்பட்ட இந்தியாவின் அன்னிய உளவுப் பிரிவான 'ரா' பெண் அதிகாரி பிரதமர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் அண்டர் செக்ரடரி ரேங்கில் உள்ளவரான நிஷா பிரியா பாட்டியா (49), ரா அமைப்பில் இயக்குனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியாவார்.
இப்போது குர்காவ்ன் நகரில் உள்ள ராவின் பயிற்சி மையத்தில் இயக்குனராக உள்ளார். இவர் நேற்று பிற்பகலில் பிரதமர் அலுவலகத்துக்கு வந்தார். பிரதமர் அலுவலகத்தில் உள்ள மூத்த ரா அதிகாரியை சந்திக்க முயன்றார். ஆனால், அதற்கு அனுமதி தரப்படவில்லை.
இதையடுத்து தனக்கு செக்ஸ் தொல்லை தந்த அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து கோஷமிட்டபடி திடீரென தான் கொண்டு வந்த விஷத்தைக் குடித்தார்.
இதையடுத்து அவரை பிரதமர் அலுவலக அதிகாரிகள் உடனடியாக ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரது உடல் நிலை தேறி வருகிறது.
தன்னை மூத்த அதிகாரிகள் செக்ஸ் தொல்லைக்கு ஆளாக்கி வருவதாக பாட்டியா ஏற்கனவே ராவை நிர்வகிக்கும் கேபினட் செக்ரடரியிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால், கண் துடைப்பு விசாரணைகளே நடந்தன. இதையடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார் பாட்டியா.
நேற்று பிரதமர் அலுவலகத்திலேயே இந்த சம்பவம் நடந்ததையடுத்து கேபினட் செக்ரடரி அலுவலகம் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பாட்டியா செக்ஸ் டார்ச்சர் புகார் கொடுத்தது உண்மை தான் என்றும், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது, புகார்கள் நிரூபணமாகவில்லை, இதனால் கடந்த மே மாதம் 19ம் தேதி விசாரணை முடிந்துவிட்டது. அதே நேரத்தில் தான் கொடுத்த புகாரை பாட்டியாவே வாபஸ் பெற்றுவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் விசாரணை நடத்திய அதிகாரிகள் கமிட்டி அரசிடம் தந்த விளக்கத்தில், நிஷா பிரியா பாட்டியா தடுமாற்றமான மனநிலையில் உள்ளார் என்றும், அவருக்கு மருத்துவ கவுன்சிலிங் தர வேண்டும் என்றும் கமிட்டி பரிந்துரைத்துள்ளதாக கேபினட் செக்ரட்டரி அலுவலகம் கூறியுள்ளது.
இது தவிர, பாட்டியா மீது அதிகாரிகளுக்கு பணியாமல் நடப்பது, அதிகாரிகளை திட்டி எஸ்எம்எஸ் அனுப்புவது உள்பட பல புகார்கள் உள்ளதாகவும் கேபினட் செக்ரடரி கூறியுள்ளார்.
ஆனால், தான் கூறிய செக்ஸ் புகார் விசாரணை ஒழுங்காக நடக்கவில்லை என்பதாலேயே இந்த முடிவுக்கு பாட்டியா வந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
அவருக்கு ஜாயி்ண்ட் செக்ரடரி ரேங்கில் உள்ள ஒரு அதிகாரி தொடர்ந்து செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து புகார் கொடுத்த பின் அவருக்கு தொல்லை மேலும் அதிகமாகியுள்ளது. விஷம் அருந்தும் முன் பிரதமர் அலுவலகத்தில் இருந்த நிருபர்களிடம் பாட்டியா கூறுகையி்ல்,
என் மூத்த அதிகாரியான ஜாயிண்ட் செக்ரடரி என்னை தன்னுடன் படுக்க அழைத்தார். ஹோட்டலுக்கு வந்தால் ரூ. 30,000 தருகிறேன் என்றார். இது குறித்து எனது செக்ரடரியிடம் புகார் தந்தபோது, அந்த புகாரி்ன் மீது அவர் இது போன்ற விஷயங்களில் என்னை தொல்லைப்படுத்த வேண்டாம் என்று குறிப்பு எழுதினார். அங்கு இது தான் நடக்கிறது.
மேலும் நான் செக்ஸ் தொல்லை புகார் தந்ததில் இருந்து கடந்த ஒரு வருடமாக எனக்கு தரப்பட்ட நெருக்கடிகள், டார்ச்சர்கள் சொல்லி மாளாது. என் தொலைபேசியை 1 வருடமாக ஒட்டுக் கேட்டு வருகின்றனர் என்றார் நிஷா.
ரா மீது புகார்கள் எழுவது புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாயிண்ட் செக்ரடரி அதிகாரியான ராமிந்தர் சிங் அமெரிக்காவுக்கு உளவு பார்த்து வந்தார். இந்திய ரகசியங்களுடன் அவர் அமெரிக்காவுக்கே தப்பியோடிவட்டார். அவரை இன்னும் பிடிக்க முடியவில்லை. அங்கு பெயரை மாற்றிக் கொண்டு குடும்பத்தோடு செட்டிலாகிவிட்டார், அமெரிக்க உளவுப் பிரிவின் துணையோடு.
ரா அதிகாரியான முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரல் வி.கே.சிங், நிறுவனத்தின் நிதியை ஏராளமாக சுருட்டியதாக புகார் எழுந்தது.
மேலும் ராவின் முன்னாள் அதிகாரி ஒருவர் எழுதியுள்ள புத்தகத்தில் எப்படி கணக்கில் வராத பணத்தை ரா அதிகாரிகள் சுருட்டுகின்றனர், தங்கள் குழந்தைகளை ரா பணத்தில் வெளிநாடுகளில் படிக்க வைக்கின்றனர், எப்படி லாயக்கில்லாத பலர் ராவில் அதிகாரிகளாக உள்ளனர் என்பது குறித்தெல்லாம் புட்டுப் புட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது.
நிஷாவுக்கு ரேணுகா சௌத்ரி ஆதரவு:
இந் நிலையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணை அமைச்சர் ரேணுகா சௌத்ரி, நிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:
நிஷாவின் குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும்.
இதற்காக நிஷா நம்பிக்கை இழந்து தற்கொலை முயற்சியை மேற்கொண்டது வருத்தம் அளிக்கிறது. நிஷாவின் விவகாரத்தை தனிப்பட்ட முறையில் கையில் எடுத்து முடிந்ததை செய்வேன் என்றார்.
பதிவு செய்தவர்: Equality
பதிவு செய்தது: 21 Aug 2008 05:26 pm
Islam does not peremit women to worship in mosque.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: shafiq
பதிவு செய்தது: 21 Aug 2008 11:01 am
திரு ராஜ் மற்றும் இதை வாசிக்கும் அனைத்து சகோதரர்களுக்கு
இஸ்லாம் பொது இடங்களில் பணிபுரிவதையோ, வேலைக்குச் செல்வதையோ தடுக்கவில்லை மாறாக உடைகளில் ஒழுக்கம் பேணச்சொல்கிறது மனித ஆண் இனத்தின் மூளை அரை குரை ஆடையனிந்த பெண்ணை கண்டவுடனும் அவ்வளவு ஏன் பெண்களின் நீளமான முடியைக்கண்டவுடனும் எதை சிந்திக்கும் என்பதை கடவுள் நன்றாக அறிவார் அதனால்தான் அனைத்தையும் மறைக்கச் சொல்கிறது இஸ்லாம் முகத்தை தவிர. சகோதரர் ராஜ் வைக்கும் வாதப்படி மேற்க்கத்திய நாடுகளில் பெண்கள் சுதந்திரம் உண்டென்றால் அவர்கள் யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளும் உரிமையும் உண்டு இதை நாம் நமது குடும்பத்திலுள்ளவர்களை நாம் அனுமதிப்போமா? மேலும் ஒற்றைப் பெற்றோர் முறையும் பெருகி வருவது நாம் அறியவில்லையn இது எல்லாவற்றும் மூலகாரணம் எது? கட்டுபாடற்ற வாழ்கை முறையே இயற்க்கைக்கு மாறாக மனிதன் நடக்க எத்தனிக்கும் போது மனித இனம் அழிய ஆரம்பிக்கின்றது இது போன்ற வழிகளில். பெண்களுக்கு சுதந்திரம் இஸ்லாம் கொடுத்துறள்ளது எந்தளவிற்கென்றால், நான் பணிபுரியும் துபாயில் போலீஸ் நிலையத்திலிருந்து கடைவீதி வரை பெண்கள் என்றால் அரபிகள், போலீஸ் உட்பட நடுங்குவர் ஏன் என்றால் பெண்கள் ஏதேனும் சொன்னால் அதுதான் எடுபடும் எந்த நாட்டு பெண்களாக இருந்தாலும். ஆனால் நீங்கள் கேட்கலாம் அங்குதானே விபச்சாரம் அதிகம் என்று. அது அரபுக்களை 1400 வருடமாக பெண்களுக்கு மரியாதை என்று பயிற்று வித்ததே இவர்கள் இப்படி பயப்பட காரணம் ஆனால் இங்கே இஸ்லாமிய முறைப்படி சட்டங்கள் இல்லை அதனால்தான் இங்கே இந்த சமூதாய சீர்கேடு. சகோதரர் ஜாபர் சொன்னது போல் நாம் ஆராய வேண்டியது நிறைய உள்ளது. நன்றி
பதிவு செய்தவர்: tamilan
பதிவு செய்தது: 21 Aug 2008 10:12 am
india raw say this is Ltte making drama
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: TRUE INDIAN
பதிவு செய்தது: 21 Aug 2008 09:56 am
@ Indian Airport organized CRIME
This is the way it works:
At the time of the passenger's departure, if the passenger is not
looking at the officer while he is stamping the exit, the officer very
cleverly tears away one of the page from the passport. When the
passenger leaves the immigration counter, the case is reported on his
computer terminal with full details. Now all over India they have got
full details of the passenger with Red Flag flashing on the Passport
number entered by the departure immigration officer. They have made
their money by doing above.
On arrival next time, he is interrogated. Subject to the passenger's
period of stay abroad, his income and standing etc., the price to get
rid of the problem is settled by the Police and Immigration people. If
someone argues, his future is spoiled because there are always some
innocent fellows who think the honesty is the basis of getting justice
in India....
Please advise every passenger to be careful at the airport. Whenever
they hand over the passport to the counters of Air India, or immigration
or the customs, they must be vigilant, should not remove eyes from the
passport even if the officer in front tries to divert their attention.
Also, please pass this information to all friends, media men and
important politicians.
Every month 20-30 cases are happening all over India to rob the NRIs the
minute he lands.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ISLAM LOGIC
பதிவு செய்தது: 21 Aug 2008 09:45 am
1 Man = 4 Woman = Equality
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 21 Aug 2008 05:57 am
NICE TRY KEEP IT UP RAW "JEI HIND"
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Indian
பதிவு செய்தது: 20 Aug 2008 07:43 pm
I totaly disagree with Jaffer. Are you going to claim that there is no women in muslim contries are s* totured.. it's soooo STUPID to cover the whole body by a whole community women just for this?? Don't cover them liek that ..make the men to grow up..mentally..
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Someone
பதிவு செய்தது: 20 Aug 2008 03:06 pm
It is sad to hear such news. But offlate many of the females take "s*x harresment" as a tool to wreke vengence (same as dowery act). Thete could be many reasons behind this act of this lady, but I doubt if "s*x torture" was the real reason behind it. Reason is that this leady is aged 49, and why shud anyone offer 30K for this old lady ;). Just a thought!!!
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: கோவிந்தா
பதிவு செய்தது: 20 Aug 2008 12:42 pm
"ஜாயிண்ட் செக்ரடரி அதிகாரியான ராமிந்தர் சிங் அமெரிக்காவுக்கு உளவு பார்த்து வந்தார். இந்திய ரகசியங்களுடன் அவர் அமெரிக்காவுக்கே தப்பியோடிவட்டார். அவரை இன்னும் பிடிக்க முடியவில்லை. அங்கு பெயரை மாற்றிக் கொண்டு குடும்பத்தோடு செட்டிலாகிவிட்டார்இ அமெரிக்க உளவுப் பிரிவின் துணையோடு.
ரா அதிகாரியான முன்னாள் ராணுவ மேஜர் ஜெனரல் வி.கே.சிங்இ நிறுவனத்தின் நிதியை ஏராளமாக சுருட்டியதாக புகார் எழுந்தது.
மேலும் ராவின் முன்னாள் அதிகாரி ஒருவர் எழுதியுள்ள புத்தகத்தில் எப்படி கணக்கில் வராத பணத்தை ரா அதிகாரிகள் சுருட்டுகின்றனர்இ தங்கள் குழந்தைகளை ரா பணத்தில் வெளிநாடுகளில் படிக்க வைக்கின்றனர்இ எப்படி லாயக்கில்லாத பலர் ராவில் அதிகாரிகளாக உள்ளனர் என்பது குறித்தெல்லாம் புட்டுப் புட்டு வைத்தது குறிப்பிடத்தக்கது."
"ரா" வின் இயக்குனராக பதவி வகித்தவர்தான் இன்றைய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர். இந்ரா அதிகாரிகளில் தகவல்கள் ஆலொசனைக்கேற்பதான் இந்தியாவின் மிகமுக்கிய உள்விவகார வெளிவிவகார முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அயல்நாடுகளுடனான பகைமை வளர்ந்து செல்வதற்கான அடிப்படை காரணங்கள் தெளிவாகிறது.
நாரயணங்களால் வழி நடத்தப்படும் இந்திய அரசியல் உருப்பட்ட மாதிரிதான். கோவிந்தா... கோவிந்தா!
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Jafar Sadiq
பதிவு செய்தது: 20 Aug 2008 12:33 pm
எனது இந்த எழுத்து யாருடைய மனதையும் புண்படுத்துமேயானால் மன்னிக்கவும். நான் மதரீதியாக எழுதுகிறேன் என்று தவறுதலாக புரிந்துகொள்ளாதீர்கள். சல்மான் கானும், சாருக் கானும் ஒரு நடிகையின் (காத்ரினா கைஃப்) பார்ட்டியில் மோதிக்கொண்டார்கள் என்ற ஒரு துணுக்குச் செய்திக்கு ஒருவர் இந்த துலுக்கணுக்கு சண்டைப் போடுவதையும், பெண்கள் பின்னடி அலைவதையும் தவிர என்ன தெரியும் என்று எழுதியிருந்தார். செக்ஸ் என்பதற்கு மதம், மொழி, நாடு என்பதெல்லாம் கிடையாது. சில இ டங்களில் நடப்பதை பொதுவாக சொல்ல முடியாது என்ற வாதத்தை வைக்காதீர்கள். அதைத்தான் மீடியா இஸ்லாத்திற்கு பல விஷயங்களில் (உ..ம். மேலே சொன்ன விஷயம் மற்றும் தீவிரவாதம்) செய்துகொண்டிருக்கிறது. செக்ஸ் தொல்லை என்பது நிச்சயமாக அனைத்து அலுவலகங்கள், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் என்று அனைத்து தளங்களிலும் குடி கொண்டுள்ளது. சில வெளி வருகின்றன. சில சமரசமாகி விடுகின்றன. பல அடங்கி விடுகின்றன. சரியாக சொல்வதானால் அடக்கப்படுகின்றன. அதனால்தான் இஸ்லாம் பெண்கள் கவர்ச்சியான பாகங்களை மறைக்க வேண்டுமென்றும், பெண்கள் பாதுகாப்பான வேலைகளில் மட்டுமே இருக்க வேண்டுமென்றும் சொல்கிறது. இதுவே பெண்ணடிமைத்தனமாக வேண்டுமென்றே அல்லது அறியாமையில் திரிக்கப் படுகிறது. வாய்க்கு வந்ததை சிந்திக்காமல் இனியாவது நிறுத்திவிட்டு சம்பந்தப்பட்ட விஷயங்களை வலையிலேயே தேடி தெரிந்துகொண்டு, ஆராய்ந்துவிட்டு பேசும் மனப்பக்க்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அதனால் வெறும் போலித்தனமாக வேண்டுமென்றே பரப்பப்பட்ட அ வதூறுகளும், வதந்திகளும் மறைந்து உண்மையான உண்மை புலப்பட பெரும் வாய்ப்புள்ளது. அது நமக்கும் நல்லது. சமூகத்திற்கும் நல்லது.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: to Jafar from Arun Iyer
பதிவு செய்தது: 20 Aug 2008 06:43 pm
Jafar, I agree with your thoughts. They were well presented as well.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Bala
பதிவு செய்தது: 20 Aug 2008 03:55 pm
Well said Mr.Jafar, Your prsentation was perfect, i have been reading this column for the past few months, many critics are misusing this column by handling of unparlimentary words, each and everyone should realise their responsibilities.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Raj
பதிவு செய்தது: 20 Aug 2008 02:26 pm
I appreciate your words and the responsibility shown on the words. It is correct these kind of issues will be there in most of the places. But we can’t restrict girls from these jobs or can’t put control on their dress. As male has right to do everything similarly girls have the same rights. In west countries, even the girls wearing shorts the society gives respect, very less sex issues. But girls choose their boyfriend and separate, that is different issue. But we should give freedom to girls.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: shafiq
பதிவு செய்தது: 20 Aug 2008 09:20 pm
திரு ராஜ் மற்றும் இதை வாசிக்கும் அனைத்து சகோதரர்களுக்கு,
இஸ்லாம் பொது இடங்களில் பணிபுரிவதையோ, வேலைக்குச் செல்வதையோ தடுக்கவில்லை மாறாக உடைகளில் ஒழுக்கம் பேணச்சொல்கிறது மனித ஆண் இனத்தின் மூளை அரை குரை ஆடையனிந்த பெண்ணை கண்டவுடனும் அவ்வளவு ஏன் பெண்களின் நீளமான முடியைக்கண்டவுடனும் எதை சிந்திக்கும் என்பதை கடவுள் நன்றாக அறிவார் அதனால்தான் அனைத்தையும் மறைக்கச் சொல்கிறது இஸ்லாம் முகத்தை தவிர. சகோதரர் ராஜ் வைக்கும் வாதப்படி மேற்க்கத்திய நாடுகளில் பெண்கள் சுதந்திரம் உண்டென்றால் அவர்கள் யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளும் உரிமையும் உண்டு இதை நாம் நமது குடும்பத்திலுள்ளவர்களை நாம் அனுமதிப்போமா? மேலும் ஒற்றைப் பெற்றோர் முறையும் பெருகி வருவது நாம் அறியவில்லையn இது எல்லாவற்றும் மூலகாரணம் எது? கட்டுபாடற்ற வாழ்கை முறையே இயற்க்கைக்கு மாறாக மனிதன் நடக்க எத்தனிக்கும் போது மனித இனம் அழிய ஆரம்பிக்கின்றது இது போன்ற வழிகளில். பெண்களுக்கு சுதந்திரம் இஸ்லாம் கொடுத்துறள்ளது எந்தளவிற்கென்றால், நான் பணிபுரியும் துபாயில் போலீஸ் நிலையத்திலிருந்து கடைவீதி வரை பெண்கள் என்றால் அரபிகள், போலீஸ் உட்பட நடுங்குவர் ஏன் என்றால் பெண்கள் ஏதேனும் சொன்னால் அதுதான் எடுபடும் எந்த நாட்டு பெண்களாக இருந்தாலும். ஆனால் நீங்கள் கேட்கலாம் அங்குதானே விபச்சாரம் அதிகம் என்று. அது அரபுக்களை 1400 வருடமாக பெண்களுக்கு மரியாதை என்று பயிற்று வித்ததே இவர்கள் இப்படி பயப்பட காரணம் ஆனால் இங்கே இஸ்லாமிய முறைப்படி சட்டங்கள் இல்லை அதனால்தான் இங்கே இந்த சமூதாய சீர்கேடு. சகோதரர் ஜாபர் சொன்னது போல் நாம் ஆராய வேண்டியது நிறைய உள்ளது. நன்றி
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Astle
பதிவு செய்தது: 20 Aug 2008 02:22 pm
Well said jafar i agree to your comments and its really true, let atleast people who comments on topics think twice before saying some bullshit. Maybe even now we might be seeing some replies which will be negative, for them i would like to tell only one thing is that they are sick or they should be idiots with no sense of mind.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர