விஜேந்தர் குமார் அபார வெற்றி - இந்தியாவுக்கு 3வது பதக்கம் உறுதி! புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
பெய்ஜிங்: இந்தியாவின் விஜேந்தர் குமார் ஆடவர் 75 கிலோ எடைப் பிரிவு குத்துச் சண்டை காலிறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு 3வது பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தோற்றாலும் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்தியாவுக்கு இனிப்பும், கசப்பும் கலந்த நாள். பிற்பகலில் சுஷில்குமார் வெண்கலம் வென்று இந்தியர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.
இதையடுத்து மாலையில் நடந்த குத்துச் சண்டைப் போட்டியில் ஜிதேந்தர் குமார் தோல்வியுற்று ஏமாற்றத்தை அளித்தார்.
ஆடவர் மிடில் வெயிட் 51 கிலோ எடைப் பிரிவுகாலிறுதி போட்டியில் ரஷ்ய வீரர் ஜார்ஜி பாலஷினுடன் மோதினார் ஜிதேந்தர் குமார். இதில் அவர் 11-15 என்ற கணக்கில் தோல்வியுற்றார்.
இதையடுத்து 75 கிலோ எடைப் பிரிவில் காலிறுதியில் நுழைந்த விஜேந்தர் குமார் மீது பார்வை திரும்பியது. அந்த எதிர்பார்ப்பை அருமையாக நிறைவேற்றி இந்தியாவுக்கு 3வது பதக்கத்தை உறுதி செய்து விட்டார் விஜேந்தர்.
இன்று மாலை நடைபெற்ற விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியில் ஈகுவடார் வீரர் கார்லோஸ் காங்கோராவுடன் மோதினார் விஜேந்தர். பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் 9-4 என்ற கணக்கில் அபார வெற்றியைப் பெற்று சாதனை படைத்தார் விஜேந்தர்.
இந்த வெற்றியின் மூலம் விஜேந்தர் குமார் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளார். அரை இறுதியில் நுழைந்துள்ளதன் மூலம் இந்தியாவுக்கு நிச்சயம் ஒரு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
அரை இறுதியில் வெற்றி பெற்றால் தங்கம் அல்லது வெள்ளிக்கு முயலலாம். தோற்றால் வெண்கலப் பதக்கம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 3வது பதக்கம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியா முதல் முறையாக தனி நபர் பிரிவுகளில் 3 பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறை என்பதால் நாடே உற்சாகத்தில் மூழ்கியுள்ளது.
தங்கமே இலக்கு - விஜேந்தர்
தனது வெற்றி குறித்து போட்டியின் முடிவில் விஜேந்தர் குமார் கூறுகையில், அரை இறுதிக்குள் நுழைந்துள்ள மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு இந்தியரின் வெற்றியுமாகும் இது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இதை அர்ப்பணிக்கிறேன்.
எனது இலக்கு வெண்கலப் பதக்கமோ, வெள்ளியோ அல்ல. தங்கப் பதக்கத்தை வெல்லவே விரும்புகிறேன். நிச்சயம் வெல்வேன் என்ற நம்பிக்ைக உள்ளது என்றார் மகிழ்ச்சியுடன்.
இந்திய விளையாட்டுத்துறைக்கு இன்னாள் மிகப் பெரிய பொன்னாள் என்பதில் சந்தேகம் இல்லை.
பதிவு செய்தவர்: good to encourage these people
பதிவு செய்தது: 21 Aug 2008 03:35 pm
CONGRATULATIONS VIJENDAR KUMAR! WISH YOU FOR GOLD MEDAL!
சுஷில் குமாருக்கு பரிசு மழை
Thursday, 21 August , 2008, 13:22
புதுதில்லி
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்துள்ளன.
தற்போது அவர் ரெயில்வேயில் டிடிஆராக பணியாற்றிய அவருக்கு, தற்போது துணை வர்த்தக மேலாளராக பதவியையும், மற்றும் 55 லட்சம் ரொக்கப் பணம் வழங்கப்படும் என்றும் ரெயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்ததுள்ளார்.
டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளார். மேலும் அவரது பயிற்சியாளர் சத்பாலுக்கு பதவி உயர்வு அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில் சுஷில்குமாருக்கு ரூ.20 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
பதிவு செய்தவர்: good to encourage these people
பதிவு செய்தது: 21 Aug 2008 03:35 pm
CONGRATULATIONS VIJENDAR KUMAR! WISH YOU FOR GOLD MEDAL!
சுஷில் குமாருக்கு பரிசு மழை
Thursday, 21 August , 2008, 13:22
புதுதில்லி
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்துள்ளன.
தற்போது அவர் ரெயில்வேயில் டிடிஆராக பணியாற்றிய அவருக்கு, தற்போது துணை வர்த்தக மேலாளராக பதவியையும், மற்றும் 55 லட்சம் ரொக்கப் பணம் வழங்கப்படும் என்றும் ரெயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்ததுள்ளார்.
டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளார். மேலும் அவரது பயிற்சியாளர் சத்பாலுக்கு பதவி உயர்வு அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில் சுஷில்குமாருக்கு ரூ.20 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
பதிவு செய்தவர்: Chennaiate Riyadh
பதிவு செய்தது: 21 Aug 2008 11:02 am
Well Done. We are proud of u.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Indian
பதிவு செய்தது: 21 Aug 2008 10:15 am
Hey asdf, could u please let us know what u did for india atleast dont dicourage any body. India will be in good position at 2020.
பதிவு செய்தவர்: asdf
பதிவு செய்தது: 21 Aug 2008 10:09 am
india gov and india olipic board give money to china and go to final
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: கவி
பதிவு செய்தது: 21 Aug 2008 09:22 am
கிரிக்கெட் ஆங்கிலேயர்களால் இந்தியாவிற்கு தரப்பட்ட ஒரு அடிமை சின்னம். பார்ப்பவர்களின் ஒரு நாளை வீணாக்கும். பார்ப்பவனை கோமாளியாக்கி, விளையாடுபவர்களும், ஷரத் பவார் போன்றவர்களும் கோடிகளில் புரள்கிறார்கள். பி சி சி ஐ போன்ற சங்கங்களை கலைத்து, ஷரத் பவாரை விவசாயத்துறையிலிருந்து நீக்கினால் இந்தியா மற்ற விளையாட்டுகளிலும், விவசாயத்திலும் முன்னேறும்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: தமிழன்
பதிவு செய்தது: 21 Aug 2008 05:09 am
செத்தபாம்பு அடிப்பவன்தான் Indian. India is one of the largest population living country. Fighting for third medal. இவன்கள் எல்லாம் 2020ல் வல்லரசாக போறான்களாம். கொடுமை சார் இது.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Tamil
பதிவு செய்தது: 22 Aug 2008 01:25 pm
Sir. We are also in India. It is true, we wont be super power in 2020. But India can be Big market for other countries to sell their products.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Naan Pappan
பதிவு செய்தது: 21 Aug 2008 06:56 am
Setha Pamban adippavan tamizhan indian kadayadhu. Try to Appreciate the him for his performance.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Real Truth
பதிவு செய்தது: 21 Aug 2008 01:13 am
Well Done. Sure You can win Gold medal. We behind your Victory.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: manithan
பதிவு செய்தது: 20 Aug 2008 10:07 pm
please think (atleast) more medal in next olimpic & asian game & south asian fedaration game .
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: true indian
பதிவு செய்தது: 20 Aug 2008 09:54 pm
Keep going Mr.Vijendar,Good luck. True Indian salute to you.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Tamilian
பதிவு செய்தது: 20 Aug 2008 09:26 pm
This is the right time to concentrate and encourage other sports. Indian government should honour the winners properly.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: மபெ சாமி
பதிவு செய்தது: 20 Aug 2008 09:25 pm
இந்தியா இன்னூம் பல போட்டிகளில் வெற்றிபெற வாழ்த்துக்கள்
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: Indian
பதிவு செய்தது: 20 Aug 2008 08:33 pm
உங்களின் வெற்றி தொடர வாழ்த்துக்கள்!!!
பதில் | அவதூறு குறித்து தகவல் தர
பதிவு செய்தவர்: ஏழுமலை
பதிவு செய்தது: 20 Aug 2008 07:47 pm
இந்த ஒலிம்பிக் போட்டிக்குப்பின்னராவது, நாட்டு மக்களின் கவனம் கிரிக்கெட்டிலிருந்து திரும்பி மற்ற விளையாட்டுகளின் பக்கம் திரும்புமா என்று காணவேண்டும். மக்களால் பெருமளவில் ஆதரிக்கப்படும் கிரிக்கெட் வீரர்களோ படுதோல்வியையே பரிசாக அளித்துக்கொண்டிருக்கிறார்கள் தொடர்ந்த்து நாட்டுக்கு. ஆனால், பெயரே அறிந்திராத அபினவ், சுஷில்குமார், விஜேந்தர் போன்றோர் காற்றில் பறந்துகொண்டிருக்கும் மானத்தைக் கயிற்றால் கட்டி மீண்டும் தலைநிமிர வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பதில் | அவதூறு குறித்து தகவல் தர