[an error occurred while processing this directive][an error occurred while processing this directive]
 முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்

ஊனமுற்றோருக்கு சலுகைகள்-கருணாநிதி அறிவிப்பு
புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

சென்னை: கட்டண சலுகையுடன் அரசு பஸ்களில் பயணம், கல்லூரி கட்டணம் ரத்து, தனியார் தொழிற்சாலை வேலை வாய்ப்பில் முன்னுரிமை, 2 ஆண்டுகள் கடந்த நிலையில் காலமுறை ஊதியம் உள்பட பல்வேறு சலுகைகளை ஊனமுற்றோருக்கு முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து, ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான 11 முக்கிய கோரிக்கைகளை அளித்தனர்.

ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து 10 கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அரசாணைகள் வெளியிடப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

இந்த அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் சுமார் 3 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இவற்றில் 3 சதவீதம் அதாவது ஏறத்தாழ 9,000பணியிடங்கள் ஊனமுற்றோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த பணியிடங்களில் ஊனமுற்றோர் பணி நியமனம் பெறுவதை உறுதி செய்யும் வகையில் சமூக நலத்துறை அமைச்சரின் தலைமையில் செயலாளர்கள் அடங்கிய உயர்நிலை குழு கண்காணிக்கும்.

அனைத்து வகை ஊனமுற்றோரும் பாகுபடின்றி மாநிலம் முழுவதும் ரயில் கட்டணச் சலுகை பெற்றுள்ளனர். அதேபோல் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்ச வரம்பின்றி பயணம் செய்ய சலுகை அளிக்கப்படும்.

பெரிய தொழிற்சாலைகளை தமிழகத்தில் நிறுவ முன்வரும் தொழில் முனைவோருடன் ஒப்பந்தம் செய்யும்போது ஊனமுற்றோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுகோள் விடுக்கப்படும்.

ஊனமுற்றோர் சுய வேலை வாய்ப்பு பெறும் வகையில், அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பிரதமரின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஊனமுற்றோர் செலுத்த வேண்டிய 5 சதவிகித பங்குத் தொகையினையும் தமிழக அரசே ஏற்று மத்திய அரசின் மானியத்துடன் வங்கிக் கடன் பெற்று சுயவேலை வாய்ப்புகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தின் கீழ் பணியாற்றி வரும் ஊனமுற்றோருக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்கள் மற்றும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் ஊனமுற்றோருக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.

பார்வையற்றோருக்கு வழங்கப்படுவது போல அனைத்து வகை ஊனமுற்றோருக்கும் வேலை வாய்ப்பற்றோர் நிவாரணத் தொகை வழங்கப்படும்.

ஊனமுற்றோருக்கு வேலை வாய்ப்பு பெறும் தகுதியை மேம்படுத்தும் வகையில் மாவட்டத்தோறும் தங்கும் விடுதியுடன் கூடிய தொழிற்பயிற்சி நிலையம், மூன்றாண்டு திட்டமாக அரசு நிதியுதவிடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் தொடங்கப்படும்.

ஊனமுற்றோர் நலனுக்கான ஒரு தனி கொள்கை உருவாக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊனமுற்றோர் நெரிசலின்றி பஸ்களில் செல்ல வசதியாக அலுவலகம் முடியும் நேரத்திற்கு 15 நிமிடம் முன்னதாகவே புறப்பட்டுச் செல்லலாம் என்று நேற்று முன்தினம் அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: ஏழுமலை    பதிவு செய்தது: 21 Aug 2008 02:03 am

பொதுவாகவே அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் மிகக்குறுகிய காலத்தில் பிரபலமடைய கையிலெடுக்கும் ஒரு ஆயுதம், மக்களின் உணர்ச்சியைத்தூண்டுவதுதான். காரணம், மக்களின் உணர்ச்சியைத்தூண்ட பணம் அதிகம் செலவழிக்க வேண்டியதில்லை. அறிக்கை விட ஒரு வெள்ளைத்தாள் வாங்க செலவழித்தால் போதும். உணர்ச்சிகரமான ஒரு விஷயத்தைத்தூண்டி விட்டால், மற்ற வேலைகளை பத்திரிகைகளும், சாதி மத சங்கங்கள் பார்த்துக்கொள்ளும். இதற்குப்பல உதாரணங்களைச்சொல்ல முடியும் இடஒதுக்கீடு முதல் அயோத்தி பிரச்சினை வரை. இதில் தேசநலனோ மக்கள்நலனோ எதுவுமில்லை. அதேபோலத்தான் திமுக மற்றும் திகவினரின் பிராம்மண துவேஷமும். தங்களை பிராம்மணர்கள் எல்லாரும் சேர்ந்து முன்னேற விடாமல் தடுத்துவிட்டதாகக் கதைகட்டிவிட்டு, அந்த 'சதித்திட்டத்தை' எதிர்த்து தானும் தனது கட்சியும் போராடத்தொடங்கியுள்ளதாகவும் அதனால் மக்களின் ஆதரவு தங்களுக்குத் தேவைப்படுவதாகவும் அறிக்கைவிட்டால் ஆயிற்று. பத்திரிகைகளும் சாதிச்சங்கங்களும் சேர்ந்து இதற்கு மேலும் முலாம் பூசி உருவேற்றி அந்த பூச்சாண்டிக்கு முழு உருவம் கொடுத்துவிடுவார்கள். மக்களைப்பற்றிக் கேட்கவேண்டியதில்லை. இந்த தறுதலைகள்(தலைவர்கள்) விடும் கதைகளை (அறிக்கைகளை) நம்பிக்கொண்டு, எங்கே நமக்கும் நமது சந்ததியினருக்கும் இதே நிலை வந்துவிடுமோ என்று தாங்களும் இந்தப்போராட்டத்தில் குதித்துவிடுவார்கள். இப்படித்தொடங்கியதுதான், இன்று நாடுமுழுவதும் உள்ள சாதி, மத துவேஷம். தலைவர்களின் அதிருஷ்டம் மற்றும் அதிகபட்ச நஞ்சுநெஞ்தத்தைக்கொண்டு இந்த ஆட்டத்தின் வெற்றி தோல்விகள் நிர்ணயமாகும். இதுபோன்ற துவேஷத்தைத்தூண்டுவதில் தலைசிறந்த நிபுணத்துவம் கொண்டவர்கள் கன்னடத்து ராமசாமி நாயக்கன், அண்ணாதுரை, கருணாநிதி போன்ற இனப்போராளிகள். ஒரு கோஷ்டியைத்தவிர மக்களால் சீண்டப்படாத ராமசாமி நாயக்கன் தன்னைத்தானே பெரியாராக அறிவித்துக்கொண்டு பார்ப்பனிய துவேஷத்தைக்கையில் எடுத்துக்கொண்டு ஆனவரைக்கும் பிரபலமடைய முயற்சித்தார். ஆட்சியைப்பிடிக்க அண்ணாவும் கருணாநிதியும் நாடியது மொழித்துவேஷம். ஆட்சி கையில் வந்த்தவுடன் திராவிடநாடு கோஷத்துடன் சேர்த்து மொழிப்பற்றையும் சுடுகாட்டுக்கு அனுப்பியதுதான் மிச்சம். அதேபோல பாஜகவிற்கு உதவியது அயோத்தி பிரச்சினை ஒன்றே. கம்யூனிஸ்டுகளுக்கும், விபி சிங் முதலான ஆட்களுக்கு உதவியது மண்டல் கமிஷன் ஒன்றே.


 [an error occurred while processing this directive]
[an error occurred while processing this directive]
 
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Barbara Mori, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India