நெல்லை-திருச்செந்தூர் அகல பாதையில் ரயில் சோதனை புதன்கிழமை, ஆகஸ்ட் 20, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற
நெல்லை: நெல்லை-திருச்செந்தூர் இடையிலான அகல பாதையில் இன்று ரயில் வெள்ளோட்டம் நடத்தப்படுகிறது.
நெல்லை-திருச்செந்தூர் அகல ரயில் பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளை ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் கேஜேஎஸ் நாயுடு ஆய்வு நடத்தி வருகிறார். ஆய்வு குழுவினர் மோட்டார் டிராலியில் நேற்று காலை 8 மணிக்கு ஆய்வு பணியை தொடங்கினர்.
செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார், நாசரேத், கச்சனாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டிணம், திருச்செந்தூர் வரை நேற்று ஒரே நாளில் அனைத்து பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
அப்போது பணிகளில் உள்ள குறைகள் அதிகாரிகளிடம் சுட்டிக் காட்டப்பட்டன. நேற்று ஆறுமுகநேரி வரை ஆய்வு நடத்தப்படும் என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட வேகமாக ஆய்வு முடிக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று திருச்செந்தூரிலிருந்து அதிவேக ரயிலில் வெள்ளோட்டம் விடப்படுகிறது. இதையொட்டி இந்த பாதையில் உள்ள 24 ஆளில்லாத ரயில்வே கேட்களில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளோட்டம் நடத்தப்படும்போது ரயில்வே கேட்களை பொதுமக்கள் கடக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
பதிவு செய்தவர்: what else
பதிவு செய்தது: 20 Aug 2008 08:15 pm
I think after the Ministers, MPs, MLAs, officers commissions, the contractors were left with little money to finish the project and they did a bad job to complete the project. That is why the safety commissioner is having problem to give permission to run rails on this route. I have there is no derailment and lot of passengers are not going to die. Lord Muruga save this country
பதில் | அவதூறு குறித்து தகவல் தர