clear
clear
clear
x

போராட்டம்-டெல்லி செல்ல முயன்ற 'டிராபிக்' ராமசாமி கைது

சனிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2008, 15:50[IST]
சென்னை: டெல்லிக்குச் சென்று போராட்டம் நடத்த கிளம்பிய டிராபிக் ராமசாமியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்கு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் டிராபிக் ராமசாமி. பொது நல வழக்குகள் தொடருவதில் புகழ் பெற்றவர். இவர் போட்ட வழக்கால்தான் கட்டாய ஹெல்மட் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த தனக்கு போலீஸார் அனுமதி மறுப்பதால் டெல்லிக்குப் போய் போராட்டம் நடத்த முடிவு செய்தார் டிராபிக் ராமசாமி. மேலும் சுப்ரீம் கோர்ட் முன்பு உண்ணாவிரதம் இருக்கவும் அவர் தீர்மானித்தார்.

இதற்காக தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார் ராமசாமி. இதைத் தொடர்ந்து போலீஸார் நேற்று இரவு அவரது வீட்டுக்கு விரைந்து சென்று அவரை காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
 
பின்னர் அவரை கைது செய்தனர். அதன் பிறகு அவரை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஆனால் அங்கு ராமசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.


User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Tamilaga Tamilan
பதிவு செய்தது: 24 Aug 2008 1:21 pm
நான் நண்பர்களுக்கு சொல்வது என்ன என்றால், நாம் யாரும் இங்கே தனியே ஒரு இனத்தை, ஒரு மதத்தை, ஒரு ஸாதியை , ஒரு மொழியை சார்ந்ததவர் மட்டும் தனியே முன்னேறி விட முடியாது! முன்னேரினால் எல்லோரும் சேர்ந்துதான் முன்னேர முடியும். இல்லை என்றால் எல்லோரும் கீழே விழா வேண்டியது தான். நமக்கு இஸ்லாமியர்களோ, இஸ்லாமோ எதிரிகள் அல்ல. இந்து மதம் எல்லா மதங்களையும் அரவனைத்து, வூக்குவிக்கும் மதம். இந்தியாவில் இஸ்லாமியார்களை மற்ற சமூகங்களுடன் ஒன்று சேர்ப்பதில்தான் இந்தியாவின் வெற்றி அடங்கி உள்ளது. நம்முடைய வழி காந்தியின் வழிதான். வேறு வழிக்கு வாயபப்பு இல்லை. அதே போல இஸ்லாமியர்கள் மத்த மதக் கடவுள்களை இழிவாகப் பேசக் கூடாது! அவர்களுக்கு தீவிரவாதச் செயல்கள் பற்றி தெரிய வந்தால், தகவல் குடுத்து தங்கள் நாட்டை, மக்களை, வூரை, தெருவை, தங்களை காத்துக் கொள்ள வேண்டும்! தலைவர்கள் எல்லாம் ஓட்டு வாங்குவதற்க்காக இஸ்லாமியர்கள் மேல் அன்பு மழை பொழிக்கிறார்கள். சாதாரண மக்களாகிய நாம் அவர்கள் நாம் சகோதரர் என்பதர்க்காக்க, அவர்கள் சக இந்தியர் என்பதர்க்காக, 99.9% இஸ்லாமியர்கள் அப்பாவிகள் என்பதால், அவர்களை அவர்களை விட்டு விடாமல், வாழ வேண்டும்!

பதிவு செய்தவர்: Pappan
பதிவு செய்தது: 23 Aug 2008 5:58 pm
it is unfortunate to arrest Mr. Ramaswamy sir. he is doing it for public only not for his personal. he should be allowed to protest. karunanidhi always against brahminns community. brahmana thuvesham athigama irukku intha govt la
பதிவு செய்தவர்: Tamilan
பதிவு செய்தது: 23 Aug 2008 8:27 pm
Traffic ramaswmay itengar what community sir. why his cases always against karunanidhi and dmk mens?
பதிவு செய்தவர்: கல்கியின் நந்தகி
பதிவு செய்தது: 23 Aug 2008 8:48 pm
ஏன்னா மு.க மட்டும் தான் தலைமுறைகளை அழிவுக்கு இட்டு செல்லும் தவறுகளை விஞ்ஞான முறையில் செய்வதில் முன்னணியில் இருப்பது. உதாரணம்: காவேரி நீர், ஹொகேனக்கல் நீர், வீராணம் நீர்.
பதிவு செய்தவர்: Sam
பதிவு செய்தது: 24 Aug 2008 12:54 pm
Brahmanarkalukku Yen Matravargal Mel Thuvesham irukkunguratjai muthalil solreengala

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்