[an error occurred while processing this directive][an error occurred while processing this directive]
 முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்

35 வெளிநாட்டுப் பைலட்டுகளை நீக்கிய ஜெட்!
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 9, 2008   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

மும்பை: தனது நிறுவனத்தைச் சேர்ந்த 35 பைலட்டுகளை நீக்கியுள்ளது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்.

இவர்கள் அனைவரும் ஜெட் ஏர்வேஸின் போயிங் - 737 விமானத்தை இயக்கி வந்த வெளிநாட்டுப் பைலட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானங்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்ததாலும், விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துவிட்டதாலும் தனியார் விமான நிறுவனங்கள் தள்ளாட்டத்தில் உள்ளன. செலவைக் குறைக்க ஊழியர் குறைப்பு உள்பட பல சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

புதிய விமான நிலையக் கொள்கைப்படி, இனி தனியார் விமான நிறுவன ஊழியர்களை நிலையத்துக்குள் அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 8000 பணியாளர்கள் வேலை இழக்கிறார்கள். இன்னொரு பக்கம் கிங்பிஷர் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு 90 சதவிகிதம் வரை சம்பளக் குறைப்பை அறிவித்து ஷாக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் ஜெட் நிறுவனம் தனது 35 அனுபவமிக்க வெளிநாட்டுப் பைலட்டுகளை நீக்கியுள்ளது. இவர்களுக்கு மாதம் தலா ரூ.10 லட்சம் வரை சம்பளம் தரப்பட்டு வந்தது. ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு இணையான தங்குமிட வசதி செய்து தரப்பட்டு வந்தது.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Sha    பதிவு செய்தது: 10 Nov 2008 09:57 am

DEAR LION DR,

Really I like your article.I appreciate you.I think u r right and good thinking person also.

Keep it up.Really it's nice talk.

TAKE CARE


 [an error occurred while processing this directive]
[an error occurred while processing this directive]
 
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Barbara Mori, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India