செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 தமிழகம்    இந்தியா    உலகம்    இலங்கை    விளையாட்டு    வர்த்தகம்
 முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்

ரூபாய் மதிப்பு: வரலாறு காணாத வீழ்ச்சி!
வியாழக்கிழமை, நவம்பர் 20, 2008   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

Indian Rupee
மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெபோதும் இல்லாத வகையில் குறைந்துவிட்டது. இன்றைய நிலவரப்படி ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ.50.55 ஆகும்.

அன்னிய நிதி நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருவதாலும், நாட்டின் பங்கு வர்த்தகம் பெரும் வீழ்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டுள்ளதாலும்,  அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது.

இதனால் தொடர்ந்து ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. புதன்கிழமை மாலை அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு ரூ.50.01-ஆகக் குறைந்திருந்தது. ஆனால் இன்று காலை வர்த்தகம் துவங்கிய சில மணிநேரத்துக்குள் ரூபாய் மதிப்பு ரூ. 50.55 ஆகக் குறைந்துவிட்டது.

சென்ற அக்டோபர் மாதம் 27-ந் தேதியன்று டாலரின் வெளிமதிப்பு ரூ.50.29-ஆக இருந்ததுதான் ரூபாயின் அதிகபட்ச வீழ்ச்சியாக இருந்தது. இப்போது ரூ.50.55 எனக் குறைந்துள்ளது முன்னெப்போதும் காணாத வீழ்ச்சியாகும்.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: முநியான்    பதிவு செய்தது: 22 Nov 2008 01:23 pm

பிரமாதம்






Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India