செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 தமிழகம்    இந்தியா    உலகம்    இலங்கை    விளையாட்டு    வர்த்தகம்
 முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்

அவசரமாய் தரையிறங்கிய இலங்கை விமானம்
வியாழக்கிழமை, நவம்பர் 20, 2008   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

Sri Lankan Airlines
கொச்சி: கொழும்பு கிளம்பிய ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் முன் சக்கரத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் அந்த விமானம் மீண்டும் கொச்சி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது.

கொச்சி நெடும்பசேரி விமான நிலையத்திலிருந்து இன்று காலை யுஎல் 165 என்ற அந்த விமானம் 97 பயணிகளுடன் கிளம்பியது. ஆனால், அதன் முன் சக்கரம் முழுவதும் உள்ளே செல்லவில்லை. பாதியில் நின்றது.

இதையடுத்து விமானத்தை மீண்டும் கொச்சிக்கே திருப்பினார் விமானி. சரியாக இயங்காத முன் சக்கரத்துடன் அந்த விமானம் தரையிறங்க இருந்ததால் விமான நிலையம் முழு அவசர கால நிலைக்குக் கொண்டு வரப்பட்டன.

ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழுவினர், தீயணைப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். ஆனாலும் அந்த விமானம் காலை 8.45 மணிக்கு பத்திரமாகத் தரையிறங்கியது.

பி்ன்னர் அதிலிருந்த பயணிகள் வேறு விமானத்தில் கொழும்பு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் கொச்சி விமான நிலையத்தில் 30 நிமிடங்கள் விமான சேவை பாதிக்கப்பட்டது. பல விமானங்கள் தாமதமாகவே தரையிறங்க முடிந்தது.


 User Comments
[ Post Comments ]

இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !







Opinion Poll

Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India