செய்திகள்    வர்த்தகம்    புக்மார்க்ஸ்    இலக்கியம்    ஜோதிடம்    சினிமா    சமையல்    ஆன்மீகம்    ஆசிரியர் பக்கம்    வீடியோ    கோப்புகள்    Font Help
 தமிழகம்    இந்தியா    உலகம்    இலங்கை    விளையாட்டு    வர்த்தகம்
 முதல் பக்கம் » செய்திகள் » விளையாட்டு » முழு விபரம்

16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
வியாழக்கிழமை, நவம்பர் 20, 2008   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

கான்பூர்: முதல் இரு ஒரு நாள் போட்டிகளில் படு தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி, கான்பூரில் நடந்த 3வது போட்டியிலும் தோல்வி அடைந்தது.

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3வது ஒரு நாள் போட்டி கான்பூரில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக இயான் பெல்லும், ரவி போபாராவும் பேட்டிங்கைத் தொடங்கினர்.

இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல தொடக்கத்திற்கு அடிகோலினர். இயான் பெல் அதிரடியாக ஆடினார். 47 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முனாப் படேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

போபாரா 60 ரன்கள் எடுத்தார். கேப்டன் கெவின் பீட்டர்சன் சிறப்பாக ஆட எத்தனித்தபோது 13 ரன்களில் எதிர்பாராதவிதாக ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்தவர்களில் ஓவைஸ் ஷா 40 ரன்களும், எஸ்.ஆர். படேல் 26 ரன்களும் சேர்த்தனர்.

ஆரம்பத்தில் நன்றாக ஆடி வந்த இங்கிலாந்து பின்னர் சரிவைக் கண்டது. இதனால் 48.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து 240 ரன்களில் சுருண்டது.

இந்திய வீரர்களில் ஹர்பஜன் சிங் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இஷாந்த் சர்மா 2 விக்கெட்களையும், முனாப் படேல், யுவராஜ் சிங், யூசுப் பதான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையயுடுத்து இந்தியா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது.

241 ரன்கள் என்ற இலக்குடன் ஆடத் தொடங்கிய இந்தியாவுக்கு, ஷேவாக் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தார்.

பட்டாசாக பொறிந்த அவர் 68 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தார்.

முதல் இரு போட்டிகளைப் போலவே இப்போட்டியிலும் யுவராஜ் சிங்கும் சிறப்பாக ஆடினார். 38 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

போட்டியின்போது வெளிச்சம் குறைவாக இருந்ததால் டக்வொர்த்-லூயிஸ் விதிமுறை குறுக்கிடலாம் என எதிர்பார்த்த கேப்டன் டோணி, விரைவாக ரன் எடுக்க முயற்சித்தார்.

அவர் எதிர்பார்த்தது போலவே வெளிச்சக் குறைவு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. டக்வொர்த் குறுக்கிட்டது. இந்தியாவின் வெற்றி இலக்கு 182 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை எடுத்திருந்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அப்போது டோணி 29 ரன்களுடனும், யூசுப் பதான் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 7 போட்டிகளைக் கொகண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஆட்ட நாயகனாக ஹர்பஜன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: hari    பதிவு செய்தது: 21 Nov 2008 03:30 am

Right Now India Team is Too Stronger(Than Aussies)






Opinion Poll