[an error occurred while processing this directive][an error occurred while processing this directive]
 முதல் பக்கம் » செய்திகள் » வர்த்தகம் » முழு விபரம்

ஸ்பைஸ்ஜெட் சிஇஓ ராஜினாமா
வெள்ளிக்கிழமை, நவம்பர் 21, 2008   இலவச நியூஸ் லெட்டர் பெற     
    

டெல்லி: குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட்டின் தலைமை நிதி அதிகாரி பார்த்தசாரதி பாசு ராஜினாமா செய்துள்ளார். அவர் விர்ல்பூல் நிறுவனத்தில் சேரலாம் எனத் தெரிகிறது.

நிதி சிக்கலில் தடுமாறிக் கொண்டுள்ளது ஸ்பைஸ் ஜெட். இந்த காலாண்டில் மட்டும் அந்த நிறுவனம் ரூ. 198 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் இந்த நிறுவனத்தில் அமெரிக்காவின் டபிள்யூ எல் ராஸ் அண்ட் கோ முதலீட்டு நிறுவனம் ரூ. 404 கோடியை முதலீடு செய்தது. ஆனாலும் பணம் கரைகிறதே தவிர லாபத்துக்கான வழியைக் காணோம். இதனால் இதன் தலைமைச் செயல் அதிகாரி சிதாந்த சர்மா சில மாதங்களுக்கு முன் பதவி விலகினார்.

இந் நிலையில் தலைமை நிதி அதிகாரி பாசுவும் விலகிவிட்டார். இவர், தான் முன்பு பணியாற்றிய வி்ர்ல்பூல் நிறுவனத்துக்கே திரும்புவார் எனத் தெரிகிறது.

இந்தியாவில் 10 சதவீத விமான சந்தையை தன் வசம் வைத்துள்ளது ஸ்பைஸ் ஜெட்.


 User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Sam    பதிவு செய்தது: 21 Nov 2008 10:39 pm

Nithi athigaari enraal CFO, not CEO. What kind of a editing team do you have. Even the print press is better than yours.
பதில் |  அவதூறு குறித்து தகவல் தர

[ கருத்தை எழுதுங்கள் ]


 [an error occurred while processing this directive]
[an error occurred while processing this directive]
 
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Barbara Mori, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India