clear
clear
clear
x

அப்போது வில்லன்.. இப்போது ஹீரோ-சங் பரிவாரின் 'நாடகம்'

சனிக்கிழமை, நவம்பர் 29, 2008, 14:31[IST]

{image-hemant-karkare250.jpg thatstamil.oneindia.in}{image-hemant-karkare250.jpg www.aol.in/tamil}மும்பை: தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிதியுதவியை ஏற்க மறுத்துவிட்டார்.

மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் ஹேமந்தை வில்லனாக சித்தரித்த நரேந்திர மோடி இப்போது அவர் பலியான பின் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு முதலைக் கண்ணீர் விட்டு வருகிறார்.

கர்கரே தான் மலேகாவ்ன் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்து சாத்வி பிரஞ்யா, ராணுவ லெப்டினன்ட் கர்னல், சில சுவாமிகள் ஆகியோர் கைதாகக் காரணமாக இருந்தார்.

இதையடுத்து இவரை வில்லன் போல சித்தரித்தன பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்றவை. குறிப்பாக அத்வானியும் மோடியும்.

இந் நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் நீத்த அவரது பெயரைப் பயன்படுத்தி ஓட்டு வாங்கும் வேலையை பாஜக செய்தது. மும்பைக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் தாக்குதலில் பலியான மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார்.

ஆனால், நாட்டுக்காக கடமை செய்து தவறு செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த தனது கணவரை வில்லனாக சித்தரித்த இவர்களிடமிருந்து எந்த நிதியுதவியையும் பெற மாட்டேன் என ஹேமந்த் கர்கரேவின் மனைவி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

அதே போல தீவிரவாதிகளுடன் சண்டை நடந்து கொண்டிருந்தபோது பாஜக தலைவர் அத்வானி தாஜ் ஹோட்டலுக்கு அருகே வந்து பேட்டி தந்து ராணுவம் என்எஸ்ஜியை எரிச்சலாக்கியதைப் போல, நரேந்திர மோடி தாக்குதல் நடந்து கொண்டிருந்த ஓபராய் ஹோட்டலுக்கு அருகே வந்தையும் ராணுவமும் போலீசாரும் ரசிக்கவில்லை.

அதிகாரிக்கு ஹேமந்த் ரகசிய கடிதம்:

இதற்கிடையே இந்த தாக்குதலில் தான் உயிரிழக்கவும் நேரலாம் என்பதை ஹேமந்த் முன்பே அறிந்திருந்தாரோ என்னவோ தனது முக்கிய அதிகாரிக்கு ஒரு ரகசிய கடிதத்தை அனுப்பிவிட்டுச் சென்றிருக்கிறார்.

தீவிரவாத எதிர்ப்புப் படையில் உள்ள ராகுல் கோவர்தனுக்கு அவர் அனுப்பிய ரகசிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை கோவர்தன் விளக்க மறுத்துவிட்டார்.

மலேகாவ்ன் விசாரணை தொடர்பான சில முக்கிய விவரங்கள் அதில் அடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

தீவிரவாதிகளுக்கு எதிராக தாஜ் ஹோட்டலில் தாக்குதலுக்குக் கிளம்பும் முன் இந்தத் கடிதத்தை கோவர்தனுக்கு அனுப்பிவிட்டு அதை அவருக்கு போனிலும் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் ஹேமந்த்.

சங் பரிவார்-கவலை தெரிவித்த ஹேமந்த்:

இதற்கிடையே முன்னாள் மும்பை போலீஸ் கமிஷ்னர் ரோட்ரிகஸ் கூறுகையில், ஹேமந்த் மறைந்ததின் மூலம் மும்பை போலீசாருக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் தன்னை சங் பரிவார் தவறாக சித்தரிப்பது குறித்து 5 நாட்களுக்கு முன் என்னை சந்தித்து வருத்தப்பட்டார். அதே நேரத்தில் தான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை என்றும் கூறிவிட்டுச் சென்றார்.

மிக நேர்மையான அதிகாரி, இக்கட்டடான கால கடத்தில் அவரை இழந்திருக்கிறோம் என்றார்.

 



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: maina
பதிவு செய்தது: 04 Feb 2009 10:27 pm
எந்த தீவிரவாத செயல் எங்கு நடந்தாலும் முசுலிம் பெயரை கேட்டே பழக்கப்பட்ட மக்களுக்கு குண்டு வைப்பவர்கள் அனைவரும் RSS சங் பரிவரதினர்தான் என்ற உண்மையை உலகிற்கு எடுத்து சொன்ன கேமாந்த் கர்கரேவை கொன்றது மஹாத்மா காந்தியை எவர்கள் கொன்றார்களோ அவர்களின் கூட்டமே கர்கரே என்ற தேச பக்தரை ஒரு நல்ல நடுநிலையாளரை கொன்றுவிட்டது. வுந்மைதீவிரவாதபயந்க்கரவதிகலாந மோடி அத்வானி வகையறாக்கள் இனி தவறு செய்து தப்பித்து விடுவர் .பெரும்பான்மை என்ற போர்வைக்குள் .

பதிவு செய்தவர்: தமிழருவி கண்ணாம்பாள்
பதிவு செய்தது: 01 Dec 2008 6:54 pm
ஹேமந்த் கர்கரேவின் மரணத்தை வைத்து அரசியல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள் புதிய தீவிரவாதிகளான மோடியும் அத்வானியும். உண்மையில் இந்த இரண்டு நாய்களும் ஹேமந்த் கர்கரேவின் மரணத்தை கொண்டாடி விட்டு தான் மீடியா முன்பு வந்து வேஷம் போட்டிருப்பார்கள். காலம் இந்த நாய்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்கட்டும். ஜெய் ஹிந்த்.

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்