Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » Business » முழு விபரம்
ரூ.75000 கோடிக்கு புதிய 'பேக்கேஜ்' அறிவிக்கும் பிரதமர்
வியாழக்கிழமை, டிசம்பர் 4, 2008, 12:42

Monrek Singh
டெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ரூ.75 ஆயிரம் கோடி சிறப்புத் திட்டங்களை அறிவிக்கவிருக்கிறார் பிரதமரும், நிதியமைச்சருமான டாக்டர் மன்மோகன் சிங்.

இந்த வார இறுதிக்குள் இதுகுறித்த முறையான அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்.

பிரதமர் தலைமையில், தொழில்துறை அமைச்சர் கமல்நாத், ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பா ராவ், திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா ஆகியோர் அடங்கிய சிறப்புக் கமிட்டி இதுகுறித்து கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை கூடி விவாதித்து இந்த முடிவை எடுத்துள்ளது.

நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்த தொகையில் ஒரு பகுதி செலழிக்கப்படும். ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவனி இருப்பில் 10 பில்லியன் டாலர்கள் வரை இதற்கென ஒதுக்கப்படும்.


இந்த 75 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம் தவிர, சிறப்புத் திட்டங்கள் சிலவற்றையும் அறிவிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார். இவற்றின் மூலம் நாட்டின் ரியல் எஸ்டேட் மற்றும் ஜவுளித்துறையை மேம்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது அரசு.

இதுதவிர சிறு தொழில்களுக்கு உதவுவதற்காக ரூ.10000 கோடி வரை சிறுதொழில் வளர்ச்சி வாரியத்துக்கு (SIDBI) தரப்படும். தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ரூ.10000 கோடி வழங்கப்படும். இதன் மூலம் வீட்டு வசதிக் கடன்களை மீண்டும் குறைந்த வட்டியில் தர ஆவண செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மேலும் வீட்டு வசதிக் கடன்களின் வட்டி விகிதம் 9 சதவிகிதத்துக்குள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வசதியாக, அனைத்து வீட்டுக் கடன் நிறுவனங்களுக்கும் 6 முதல் 7 சதவிகித வட்டியிலேயே கடன்கள் வழங்கவும் தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Megan
பதிவு செய்தது: 04 Dec 2008 3:51 pm
Engal thalaivar mudhal amaichar kalaignar Thalaivaaa... engal Tamil thalaivaa.. ellorudanum Delhi sendru prime minister idam ilangai porai nirutha sonna thalaivaa nee vaalga.. nee mattum thaan en elangai tamilanai kaakum ore unmayana tamilan... nee nam tamil makkalukkagavum tamil natukagavum seium thiyagangal pala kodi.. matra nayellam kandukolladhe.. nee thaan raja... engal tamil raja nee innum 100 aandugal nalamudan vaala vendum... thalaivaa...

பதிவு செய்தவர்: krishna prabhu
பதிவு செய்தது: 04 Dec 2008 2:26 pm
அது சரி...இப்படி சிறு தொழிலுக்கு ஒதுக்கப்படுகிற பணம் தொழில் செய்பவர்களுக்கா போகப்போகிறது. அரசியல் வாரிசுகளின் சொத்தாகத்தானே சேரப்போகிறது.

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India