மும்பை: சத்யம் நிறுவனத்தின் வீழ்ச்சி, இன்று பங்குச் சந்தையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. பிற்பகல் 2 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 880 புள்ளிகளை இழந்து தடுமாறிக்கொண்டுள்ளது.
நிப்டியில் 205 புள்ளிகள் சரிந்துவிட்டன. சத்யம் நிறுவனப்பங்குகள் கிடுகிடுவென சரிந்து ரூ.188 லிருந்து 49 ரூபாய்க்கு வந்துவிட்டன. இந்தப் பங்குகளை வைத்திருந்து சாதாரண மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். ஆனால் பெரும் நிறுவனங்கள் மற்றும் இதில் கைதேர்ந்த புரோக்கர்கள் பலர் நேற்றே கணிசமான பங்குகளை விற்று காசு பார்த்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
சத்யம் தவிர, ரிலையன்ஸ், ஜெய்பிரகாஷ் அஸோஸியேட்ஸ் நிறுவனப் பங்குகள் பெரும் வீழ்ச்சிக்குள்ளாயின.
டாடா ஸ்டீல், இன்போஸிஸ் போன்றவை சொற்ப லாபத்தில் கைமாறின.
பிற்பகல் 2 மணி நேர நிலவரம்: சென்செக்ஸ் 9618.48 (-717.45) நிப்டி 2912.60 (-200.20)