Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
கலப்பு திருமணம்: தாயின் ஜாதியும் பொருந்தும்
புதன்கிழமை, ஜனவரி 7, 2009, 15:39 [IST]

கலப்பு திருமணத்தால் பிறந்த குழந்தைகளுக்கு தாயின் ஜாதியும் பொருந்தும்: உயர்நீதிமன்றம்

சென்னை: கலப்பு திருமணம் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு தந்தையின் ஜாதி தவிர, தாயின் ஜாதியும் பொருந்தும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை பஞ்சாயத்து யூனியன் 12-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் கஸ்தூரி.

இந்த வார்டு ஆதிதிராவிடருக்காக ஒதுக்கப்பட்டதாகும். இதில் கஸ்தூரி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த தி.மு.க. வேட்பாளர் சிவப்பிரகாசம் கோவை செசன்சு கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.



அதில், கஸ்தூரியின் தந்தை நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர். தாயார் ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்தவர். தந்தை எந்த ஜாதியோ அதுதான் குழந்தைக்கும் பொருந்தும். ஆனால் கஸ்தூரி தனது தாயாரின் ஜாதியை காட்டி ஆதி திராவிடர் என சான்றிதழ் பெற்றுள்ளார். எனவே அவர் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கஸ்தூரி வெற்றி செல்லாது என்று தீர்ப்பு கூறினார்.

இதை எதிர்த்து கஸ்தூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். நீதிபதி ஆறுமுக பெருமாள் ஆதித்தன் இதை விசாரித்தார்.

அப்போது, கஸ்தூரியின் வழக்கறிஞர் செல்வராஜ் ஆஜராகி, கலப்பு திருமணம் செய்யும் தம்பதியின் குழந்தைக்கு தாயின் ஜாதியும் பொருந்தும் என்று அரசு ஆணை உள்ளது. ஆனால் கீழ் கோர்ட் தவறாக தீர்ப்பு கூறி உள்ளது. எனவே கஸ்தூரி வெற்றி செல்லும் என அறிவிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் தீர்ப்பளித்த நீதிபதி, தாயின் ஜாதியும் குழந்தைக்கு பொருந்தும். எனவே கஸ்தூரிக்கு ஆதி திராவிடர் என சான்றிதழ் கொடுத்தது சரியானது. இதனால் அவரது வெற்றி செல்லும் என்று உத்தரவிட்டார்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: கலப்பு திருமணம்
பதிவு செய்தது: 08 Jan 2009 6:01 am
கலப்பு திருமணம் என்ற பெயரில் எல்லா வந்தேறி தெலுங்கு இதே வ டி யா பசங்க தமிழ் இனத்தை அழிக்கிறார்கள். தமிழ் இன சாதிகளுக்குள் கலப்பு திருமணம் வரவேற்க பட வேண்டும். கலப்பு திருமணத்தை ஆதரிப்பவகள் , தலைவர்கள் எல்லாரும் வேற்று இனத்தில் பிறந்து தமிழன் பீயை தின்று , தமிழ் நாட்டில் வாழுபவர்கள் ... வாழ்தவர்கள். இன்று கலப்பு திருமண திட்டமும் இந்த வந்தேறி இதே வ டி யாபசாங்க தமிழ் நாட்டில் கூத்து அடிக்க தான் தமிழா விழித்து கொள் . இனம் இழந்து போவாய் .

பதிவு செய்தவர்: கோபக்காரபயபுள்ள
பதிவு செய்தது: 07 Jan 2009 8:21 pm
கலப்பு திருமணம் செய்யும் தம்பதியின் குழந்தைக்கு தாயின் ஜாதியும் பொருந்தும் என்று அரசு ஆணை உள்ளது. இது இருப்பது மிகவும் சரியானது. ஒரு உயர் ஜாதியினர் ஒரு தாழ்த்தப்பட்டவருடன் மனம் முடித்தால் அவருடைய வாரிசுகளுக்கு சலுகைகளை தர வேண்டும். அது கலப்புத்திருமணத்தை ஊக்குவிக்கும். அனால் தாழ்த்தப்பட்டவருடன் எப்ப்போதும் இழிவு படுத்தும் (so called) பிற்படுத்தப் பட்டவர்களுக்கு அனைத்து சலுகைகளையும் ரத்து செய்ய வேண்டும். தயாநிதி மாறன், அன்புமணி ராமதாசு எல்லாம் பிற்படுத்தப்பட்டவர்கள்.

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India