Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
'கொத்தடிமை, அடியாள், எடுபிடி'- ஜெ மீது போலீஸ் பேரமைப்பு பாய்ச்சல்
புதன்கிழமை, ஜனவரி 7, 2009, 13:20 [IST]

சென்னை: போலீசாரை ஜெயலலிதா பயமுறுத்தி வருவதாக தேர்தல் ஆணையத்திடம் போலீசார் நல பேரமைப்பு புகார் மனு கொடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை குடும்பத்தினர் நல பேரமைப்பின் தலைவர் சுப.சீதாராமன், பொதுச் செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள புகார் மனு விவரம்:

தேர்தல் பிரசாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா போலீசார் திமுகவின் கொத்தடிமைகளாகவும், அடியாட்களாகவும், எடுபிடிகளாக செயல்படுவதாகவும், தான் ஆட்சிக்கு வந்தவுடன் போலீசாரை டிஸ்மிஸ் செய்து விடுவேன் என்றும் பொதுக் கூட்டங்களில் பகிரங்கமாக எச்சரித்து வருகிறார்.

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு தொடங்கியது முதல் ஜெயலலிதாவும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் விருப்பு வெறுப்பின்றி பணியாற்றும் காவல் துறையினரை வாயில் வந்தபடி பேசி வருகின்றனர். நசுக்கி விடுவோம், பழிவாங்குவோம் என்று அவர்கள் பகிரங்கமாக பேசி வருவது பத்திரிகைகளில் வந்த வண்ணம் உள்ளன.



தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தா இத்தகைய வரம்பு மீறிய சட்ட விரோத பேச்சுகளை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மாறாக 2 உயர் போலீஸ் அதிகாரிகளை காரணமின்றி மாற்றிட காரணமாக இருந்துள்ளார்.

அரசு அலுவலர்களை நேர்மையாக தேர்தல் பணி செய்யவிடாமல் ஜெயலலிதாவும், வைகோவும் அச்சுறுத்தி வருவது விருப்பு வெறுப்பின்றி செயல்படும் காவல் துறையினரின் மற்றும் அரசு அலுவலர்களின் நிம்மதியை குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.

பிற அரசு ஊழியர் சங்கம் போல், போலீசாருக்கும் சங்கம் இருந்திருந்தால் ஜெயலலிதாவிற்கும், வைகோவுக்கும் சரியான பதிலடி கொடுத்திருப்பார்கள். அதிமுக என்ற கட்சி ஆளும் கட்சியான காலம் முதல் போலீசாரை திட்டமிட்டு பழி வாங்கி வருகிறது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் 1979-80ம் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான போலீசாரை டிஸ்மிஸ் செய்து அவர்கள் குடும்பங்களை போலீஸ் காலனியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி கோரத்தாண்டவமாடினார்கள்.

ஓரிரு போலீசார் இதனால் தற்கொலை செய்து கொண்டனர்.

அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் கருணாநிதி முயற்சியின் பேரில் மறைந்த தலைவர் ஜி.கே.மூப்பனார் துணையோடு பிரதமர் இந்திரா காந்தியை நாங்கள் இருவரும் டெல்லியில் சந்தித்ததன் விளைவாக தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான போலீசார் மீண்டும் வேலையில் சேர்ந்ததை நாடு மறவாது.

இப்படி அதிமுக என்பது போலீசாரை பிறவி எதிரியாக கருதி பழிவாங்குவதும், நசுக்குவதும் தொடர் நிகழ்வாக இருக்கிறது. எனவே, மத்திய உள்துறை அமைச்சகம் தேர்தல், ஆணையம் ஆகியவை ஜெயலலிதா, வைகோ ஆகியோர் போலீசாரை மிரட்டி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து வரும் குற்றத்திற்காக கிரிமினல் வழக்குத் தொடர வேண்டும் என்று இவர்களது மிரட்டலால் கலங்கும் போலீசார் குடும்பங்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: வைகோ எவ்வளவோ மேல்
பதிவு செய்தது: 07 Jan 2009 11:48 pm
வைகோவும் ஒரு அரசியல் வாதி தான் அனால் அவருக்கு அரசியல் முன்னோடி கலைஞர் தான் ௧. காடுவெட்டி குரு பேசிய ஜனவரி மாத பேச்சுக்கு மே மாதம் விளிதுக்கொண்டவர் கலைஞர். கலைஞரின் உயிருக்கே சவால் விட்டதாக கூறி தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது குரு மீது. ஆனால் நான்கு மாதம் கழித்து அதே குரு தோழமை கட்சி நண்பர். தேசிய பாதுகாப்பு சட்டம் தேவையற்றது!! ௨. இரண்டே வாரங்களில் ராஜினாமா. ஒன்றும் நடக்கவில்லை என்றதும் இப்போது ராஜினாமா செய்ய தேவையில்லை ௩. பொது உடமை தோழர்களுக்கும் திமுகாவிர்க்கும் உள்ள வரலாறு மிக நீண்டது. அதே கூட்டணி விட்டு சென்ற பிறகு தோழர்களுக்கு வரலாறு தெரியவில்லை உளறுகிறார்கள்!! ௪. நெஞ்சு கொதிக்கிறது துரோகத்தை நினைத்து என்று ஒரு கட்டுரை முரசொலியில் பேரன்களை எதிர்த்து. பேரன்கள் உண்மையை சொல்வேன் என்று ஒரு எச்சரிக்கை விட்டதும் குடும்ப இணைப்பு விழா "நெஞ்சம் நெகிழ்ந்தது" என்னும் ஒரு வசனம். இது நடந்தது ஒரு வார காலத்திற்குள் இந்த காலில் விழும் நிகழ்ச்சி ௫. இதை விடக் கொடுமை, குஜராத் படுகொலைகள் நடந்தபோது BJP ஆட்சிக்கு முழு ஆதரவளிதடோது அமைச்சரவையிலும் வழக்கம் போல இடம்பெற்று அதுத தேர்தலில் BJP ஒரு மதவாதக் கட்சி!! தான் பங்கேற்ற ஆட்சியை எதிர்த்தே ஒரு கோமாளி பிராச்சாரம். இப்போது தமிழர் பிரச்சனையிலும் காங்கிரசுக்கு முழு ஆதரவு தெருவித்து வரும் கலைஞர் நாளை, காங்கிரஸ் உறவு முறித்து கொள்ள இதே காங்கிரஸ் தமிழர்களுக்கு எதிரானது என்று குரல் கொடுத்தாலும் ஆசிரியப் படுவதற்க்கில்லை. நமது மருத்துவர் அய்யா தனது நிலையை அறிவிக்கமளிருப்பதும் இதே நோக்கில் தான். இன்னமும் காவிரிப் பிரச்சனை, தமிழர் பிரச்சனை என்று பலவற்றில் வண்ணமிகு வசனங்கள் எழுதிய கலைஞரை விட, உள்ளே போட்டாலும் தமிழர் பிரச்சனையில் வண்ணம் மாறாமல் இருக்கும் வைகோ எவ்வளவோ மேல்

பதிவு செய்தவர்: Public
பதிவு செய்தது: 07 Jan 2009 7:33 pm
இந்த பத்தினி ஜெயா மீது கிருமினல் நடவடிக்கை எடுப்பதில் தப்பே இல்லை.... ! இவளுக்கு நல்லவர்(?) முகவோ, எந்த கெட்ட பழக்கமும் இல்லாத விசம்காந்தோ பரவாயில்லை.....!!!!!

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India