Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » முழு விபரம்
பள்ளியைத் தாக்கி தகர்த்த இஸ்ரேல் - 42 பேர் பரிதாப சாவு
புதன்கிழமை, ஜனவரி 7, 2009, 12:02 [IST]

Israeli army attacks UN-run Gaza school
ஜெருசலேம்: ஐ.நா. கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளியை இஸ்ரேலியப் படைகள் தாக்கித் தகர்த்தன. இதில் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த அப்பாவி பொதுமக்கள் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

இஸ்ரேலின் கடும் தாக்குதலிலிருந்து தப்பிக்க பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவற்றில் பாலஸ்தீனியர்கள் புகலிடமடைந்துள்ளனர்.

காஸா முனைப் பகுதியில் உள்ள ஐ.நா. கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு பள்ளியிலும் இதுபோல நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைக்கலம் புகுந்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்தப் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேலியப் படைகள் கடும் தாக்குதலைத் தொடுத்தன.

இந்தத் தாக்குதலில் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த 42 அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமான பேர் காயமடைந்தனர்.



இந்த அராஜக தாக்குதலில் பல குழந்தைகளும் கூட பலியாகியுள்ளன. சிதறிப் போன அந்த பிஞ்சுக் குழந்தைகளின் உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கிடந்ததைப் பார்க்கவே மிகப் பரிதாபமாக இருந்தது.

இந்த கொடூரக் கொலை மூலம் காஸாவில் பலியானோரின் எண்ணிக்கை 620ஐ எட்டியுள்ளது.

டிசம்பர் 27ம் தேதி முதல் வெறித்தனமாக தாக்கி காஸாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய சம்பவம் நடந்த இடம் ஜபாலியா என்ற இடமாகும். அங்கு இஸ்ரேல் ராணுவத்தின் டாங்குப் படை சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியதில் இந்தக் கொடூரம் நடந்தது.

ஆனால் அந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து தங்களது படைகள் மீது மார்ட்டர் தாக்குதல் நடைபெற்றதால்தான் பள்ளி மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

பள்ளிகளை கவசமாக பயன்படுத்திக் கொண்டு ஹமாஸ் தங்கள் மீது மார்ட்டர் தாக்குதலை நடத்துவதாகவும் அது கூறுகிறது.

முன்னதாக காஸா நகரில் உள்ள மூன்று ஐ.நா. பள்ளிகள் மீதும் இஸ்ரேல் விமானப்படை குண்டு வீசித் தாக்கியது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

ஐ.நா. முதல் உலக நாடுகள் பலவும் போரை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தும், அத்தனையையும் நிராகரித்து விட்டது இஸ்ரேல். தனக்கு தோன்றியதை மட்டுமே அது செய்து வருகிறது. கடைசி ஹமாஸ் போராளி கொல்லப்படும் வரை தாக்குவோம் எனவும் பிடிவாதமாக கூறிக் கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

இந்த நிலையில், தெற்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் என்ற நகருக்குள் தற்போது இஸ்ரேலிய டாங்குகள் நுழைந்து கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: sdfsd
பதிவு செய்தது: 10 Jan 2009 12:14 pm
மனித தன்மை யுள்ள எந்த ஒரு மனிதனும் isreal மிருகங்களின்

பதிவு செய்தவர்: இந்திய முஸ்லீம்
பதிவு செய்தது: 08 Jan 2009 12:25 pm
அன்பு சகோகளே, மனித தன்மை யுள்ள எந்த ஒரு மனிதனும் isreal மிருகங்களின் அரசை சப்போர்ட் செய்ய மாட்டான் இஸ்ரேலின் இனவெறிக்கும் இந்துத்துவ இனவெறிக்கும் வித்யாசம் இல்லை. இஸ்லாம் எனும் சத்திய மார்க்கத்தை ஏற்று கொண்டதற்காக சகோதர மக்களை கொள்ளும் இந்துத்துவ வெறியர்களின் கருத்து சத்தியத்தை உணராத முட்டாளின், அறிவீலிகளின் கருத்து. இஸ்லாம் வுருவமிள்ள ஒரு இறைவனை மட்டுமே வணங்க சொல்லுகிறது. படைத்தவனை வணங்கசொல்லுகிறது படைக்க பட்ட வைகளை வணங்க கூடாது என்கிறது. இதே கருத்தை தான் இந்து வேதங்களும் சொல்லுகிறது இந்துவா வெறியர்களுக்கு இந்துமதமும் தெரியாது இஸ்லாமும் தெரியாது நீங்கள் உண்மை அறிவாளிகளாக இருந்தால் இந்து வேதங்களை முதலில் படியுங்கள் இந்தியாவில் குண்டு வைப்பது இந்துவா தான் குண்டு வைத்துவிட்டு பழிய முஸ்லிம்களின் போடுக்கிரர்கள் உண்மையே வுற்று நோக்கினால் குண்டுவேடிப்புகல்லி அதிகமாக பாதிக்கப்படுவது முஸ்லிம்கள்தான் அதை கண்டுபிடித்த மும்பை காவல்துறை அதிகாரியே கொள்ளுவதர்குதன் மும்பை அட்டாக் இந்துவா செய்தது. ஹேமந்த் கர்க்கரே, மலேகான் குண்டு வெடிப்பு ஹைதரபாத் மக்க மஸ்ஜித், டெல்லி சும்மா மஸ்ஜித் என்று அனைத்து குண்டு வடிப்புக்களிலும் சம்பத்த பட்ட இந்துவா தான் என்பதை கண்டு பிடித்தவர். இதுவரைக்கும் இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புக்களிலும் உண்மை குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. ஏனென்றால் குண்டு வைத்ததும் இந்துத்துவ தான் அதை கண்டுபிட்டிக்க வேண்டிய காவல்துறையிலும் இந்துத்துவ கறுப்பாடுகள் அப்பாவி முஸ்லீம் களை கைது செய்கிறது

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India