Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » Business » முழு விபரம்
ஊழியர்களின் வேலைகளை காப்போம்-சத்யம்
வியாழக்கிழமை, ஜனவரி 8, 2009, 18:05 [IST]

ஹைதராபாத்: ராஜூ ஹைதராபாத்தில் தான் உள்ளார். அவர் எங்கும் ஓடிப் போகவில்லை என்று சத்யம் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள ராம் மைனாம்பதி கூறியுள்ளார்.

இன்று சத்யம் உயர் அதிகாரிகளுடன் நிருபர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

உலகம் முழுவதும் உள்ள எங்களது கஸ்டமர்களுடன் பேசி வருகிறோம். அவர்களிடம் உண்மை நிலையை விளக்கி வருகிறோம். அவர்களும் நிலைமையை புரிந்து கொண்டுள்ளார்கள்.

நிறுவனத்தின் நிதி நிலையை வெளிப்படையாக தெரிவிப்பது, நிர்வாகத்தை வெளிப்படையாக நடத்துவது தான் எங்களது முதல் வேலை.



இப்போது நடந்து கொண்டிருக்கும் பணிகளி்ல் தேக்கமோ, தடையோ ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம். பணியாளர்களின் வேலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடு்க்கப்படும்.

ஆடிட்டர்கள் சொன்னதை வைத்துத் தான் இதுவரை செயல்பட்டோம். இப்போது நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை சுய முன்னணி ஆடிட்டர்களை வைத்து ஆய்வு செய்து வருகிறோம்.

நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான ஸ்ரீனிவாஸ் வட்லாமணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்த ராஜினாமா ஏற்கப்படவில்லை.

நிர்வாக இயக்குனர்களுக்கு ராஜூ எழுதிய கடிதத்தில் உள்ள விவரங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். கஸ்டமர்களிடமிருந்து நிறுவனத்துக்கு வர வேண்டிய தொகை ஏராளமாக உள்ளது.

அதே நேரத்தில் கையிருப்பு நிலைமை கவலையளிக்கிறது. நிறுவனத்தின் செயல்பாட்டைத் தொடர எவ்வளவு நிதி தேவை என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.

ராஜூ முழு அளவில் எங்களுக்கு ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், இப்போது அவர் எங்களுடன் தொடர்பில் இல்லை. அவர் ஹைதராபாத்தில் தான் இருக்கிறார்.

அரசுடனும், செபியுடனும் முழு அளவி்ல் விசாரணைகளில் ஒத்துழைப்போம்.

நான் உள்பட இப்போது இடைக்கால நிர்வாகிகளாக பொறுப்பேற்றுள்ள யாரும் எந்த லாபத்தை எதிர்பார்த்தும் இந்தப் பொறுப்புகளை ஏற்கவில்லை. நிறுவனத்தை காக்கவே இந்தப் பொறுப்புகளை ஏற்றுள்ளோம்.

நடந்துள்ள முறைகேடு குறித்து நிர்வாக இயக்குனர் குழுவுக்கு எதுவும் தெரியாது என்பதே உண்மை என்றார்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: சத்யம் ஊழியன்
பதிவு செய்தது: 11 Jan 2009 1:30 pm
இந்த ஹரி மலையான் எல்லா மட்டதிளையும் மல்லுவ HR Assintanta இருந்து இப்போ இவன் குளோபல் மார்க்கெட்டிங் சீப் அயிடான?..இனிமே இத சத்தியமா காபாதவே முடியாது..மல்லு போன கம்பெனியும் ஆமை புகுந்த வீடும் உருப்படவே முடியாது..பொண்ணுங்கள கூட்டி மட்டும் குடுத்தா இவ்ளோ பெரிய பதவிக்கு வர முடியும்போது எங்கள மாதிரி படிச்சவன் எல்லாம் பொறுக்க போக வேண்டியதுதான்

பதிவு செய்தவர்: ஏழுமலை
பதிவு செய்தது: 08 Jan 2009 11:07 pm
ஊழியர்களை எப்பாடுபட்டாவது காப்போம் என்று சத்யம் கூறுவது அபத்தமாக இருக்கிறது. உண்மையிலேயே இவர்களுக்கு இந்த எண்ணம் இருந்திருந்தால், இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். இதுபோன்ற பித்தலாட்டங்கள் வெளியே தெரிந்தால், அது ஆயிரக்கணக்கான ஊழியர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதிக்கும் என்று தெரியாமலா இருக்கும் இந்தத் நிர்வாகத்துக்கு. அளவுக்கதிகமான பணமும் புகழும் ஒரு மனிதனை அதல பாதாளத்துக்குத் தள்ளி அவன் மீது ஏறி மிடத்து விடும் என்ற தத்துவம் சத்யம் விஷயத்தில் உண்மையாகிவிட்டது.

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India