Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
தீவிரவாத மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் - பிரதமர்
வியாழக்கிழமை, ஜனவரி 8, 2009, 16:36 [IST]

Manmohan Singh
சென்னை: தீவிரவா மிரட்டல்களுக்கு ஒருபோதும் இந்தியா பணியாது. பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளை ஓரம் கட்ட கடுமையாக போராடுவோம் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

7வது வெளிநாட்டு இந்தியர் மாநாட்டை சென்னையில் தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:

பாரம்பரியம் மிக்க தென்னகத்தில் சென்னை நகரில் இந்த மாநாடு நடக்கிறது. தமிழர்கள், தெலுங்கு இன மக்கள், வங்காளம், ஒரிஸ்ஸாவைச் சேர்ந்தவர்கள் பண்டைய காலத்திலேயே கடல் கடந்து வெளிநாடு சென்றிருக்கிறார்கள். அது நாடுகளைப் பிடிப்பதற்காக அல்ல.

தங்கள் உணர்வுகளை அங்குள்ள மக்களுடன் பகிர்ந்து கொண்டு, அவர்களுடன் இணைந்து வாழ்வதற்காக.


வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், மிகவும் சிறப்பாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இந்தியாவின் கலாச்சாரம், மதம், மொழி ஆகியவற்றை காப்பதுடன் தாங்கள் வாழும் நாட்டு மக்களுடன் அனுசரித்துப் போகிறார்கள்.

தங்களுடன் அந்த நாடும் வளர உழைக்கிறார்கள். வெளிநாடு வாழ் இந்தியர் அமைப்பு, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும், இந்தியாவுக்கும் ஒரு இணைப்புப் பாலமாகத் திகழ்கிறது.

நமது இந்திய நாடு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. இந்தியர்கள் பல நூற்றாண்டு காலமாக கலை, பண்பாடு, ஒற்றுமை, பொருளாதாரம் ஆகியவற்றை பேணி காப்ப தில் உறுதியாக இருந்து வருகிறார்கள்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள், தங்கள் வாழும் நாட்டின் வளர்ச்சிக்கு ஆலோசனையும் வழங்குகிறார்கள்.

சமீபத்தில் மும்பை நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்தியாவை சீர்குலைக்கும் தீவிரவாதிகளின் முயற்சிகள் ஒருபோதும் பலிக்காது. வெற்றி பெறாது. நமது நாட்டின் பனமுக கலாச்சாரம் மற்றும் சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவால்தான் சமீபத்திய மும்பை தீவிரவாதத் தாக்குதல். எத்தகைய அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தியா உள்ளது என்பதை இது நிரூபித்தது. இந்தியா வெல்லக் கூடாது என்று நினைப்போரின் செயல்தான் இது.

ஆனால் தீவிரவாதமும், தீவிரவாதிகளும் நம்முடைய அரசியல் அமைப்பு மற்றும் சமூக கட்டமைப்பை சீர்குலைக்க நாம் அனுமதிக்க மாட்டோம். நாட்டின் பாதுகாப்பையும், தேசிய ஒருங்கிணைப்பையும் கட்டிக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம்.

தீவிரவாதிகளுக்கு சாதகமான இடம் இந்த உலகில் எங்கும் இல்லை என்பதை உறுதி செய்ய உலக சமுதாயத்துடன் இணைந்து இந்தியா செயல்பட்டு வருகிறது.

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் சிக்கலுக்கு மத்தியிலும், இந்தியாவின் பொருளாதார அடிப்படை சீர்குலையாமல் ஸ்திரமாகவே உள்ளது.

நடப்பு ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என நம்புகிறோம். இது உலக அளவில் மிகச் சிறந்த வளர்ச்சியாகும்.

இந்தியாவில் உறுதியான பொருளாதாரத்தை நிலை நாட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 34 ஆண்டுகளாக அணுசக்தி துறையில் நாம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தோம். சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவுடன் செய்த அணுசக்தி ஒப்பந்தத்தால் புதிய பலம் பெற்றிருக்கிறோம்.

இந்த அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் முழு அளவில் ஆதரவு கொடுத்தனர். எனவே தான் அதை நிறைவேற்ற முடிந்தது.

உலக அளவில் இந்தியா, சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகிறது. பல் வேறு சவால்களை நாம் சமாளித்து வருகிறோம். இதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஒத்துழைப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களுக்கு நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இஸ்ரேலுக்குக் கண்டனம்:

காஸா நகரில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. சர்வதேச சமுதாயம் ஒன்றிணைந்து, அப்பிராந்தியத்தில் அமைதி திரும்ப உதவ வேண்டும். விரைவில் இது நடக்க வேண்டும். பாலஸ்தீனத்திற்கும், அந்த மக்களுக்கும் இந்தியாவின் ஆதரவு எப்போதும் போல தொடரும்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான குடியுரிமை சட்டம் 2006ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதன் படி வெளிநாடுகளில் வாழும் டாக்டர்கள், என்ஜினீயர்கள், கட்டிட நிபுணர்கள், ஆடிட்டர்கள் உள்ளிட்டோர் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செய்படமுடியும்.

புதிய எண்ணங்கள், வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் இந்திய மக்களுடன் அவர்கள் தொடர்பு கொண்டு தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்காக இந்திய வம்சா வழி தொடர்புக்கான நெட் வொர்க்கை இன்று தொடங்கி வைத்துள்ளேன். இது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

ஸ்மார்ட் கார்ட்:

வளைகுடா நாடுகளில் 50 லட்சம் இந்தியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஓமன், கத்தார் ஆகிய நாடுகளுக்கு நான் சென்றபோது அவர்களுடைய உழைப்பை பார்த்து ஆச்சரியமடைந்தேன். அந்த நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

வெளிநாடு வாழ் இந்தியர் களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு ஒப்பந்தங்கள் செய்துள் ளோம். அவர்களுக்காக ஸ்மார்ட் கார்ட் முறை மத்திய அரசால் அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் அவர்கள் பற்றிய விவரம், பணிபுரியும் இடம், இன்சூரன்சு போன்ற எல்லா விபரங்களும் இடம் பெறும்.

ஸ்மார்ட்கார்டு வைத் திருப்பவர்கள் வெளிநாடு செல்வதற்கான நடை முறைகள் எளிதாக இருக்கும்

அயல்நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் இந்தப் பணியாளர்கள் குறித்த அனைத்து விவரங்களும் இருக்கும். இதன் மூலம் வெளிநாடுகளில் வேலைக்குச் செல்லும் இந்தியர்களுக்கு பலவித பயன்கள் கிடைக்கும்.

இந்த ஆண்டு நாம் சந்திராயன்-1 அனுப்பி உள்ளோம். விரைவில் சந்திராயன்-2 ஏவப்படவுள்ளது.

அம்புலி மாமா என்று முன்பு நிலாவை அழைப்பார்கள். நிலாவில் இந்தியர்கள் காலடி எடுத்து வைக்கும் காலம் வர உள்ளது.

நமது நாடு தொழில் நுட்பத்தில் பல்வேறு சாதனை களை படைத்து வருகிறது. உலக அளவில் இந்தியர்கள் பொருளாதாரத்திலும் வாழ்க்கை தரத்திலும் முன் னேற்றம் அடைந்து வருகிறார்கள். சட்டத்துக்கு மதிப்பு அளிக்கிறார்கள் என்றார் மன்மோகன் சிங்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: RAJA
பதிவு செய்தது: 11 Jan 2009 1:59 pm
ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் தொடுத்திருக்கிறது;பயங்கரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் எப்படி கையாள வேண்டும் என்பதற்கு இஸ்ரேலின் நடவடிக்கைகள் சரியான எடுத்துக்காட்டு. உலகிலேயே பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நாடு இந்தியா . பாகிஸ்தானின் ஆதரவுடன் பயங்கரவாதிகள் இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்தியா அரசு கன்டன அறிக்கைகளையும் உலக நாடுகளிடம் பாகிஸ்தானின் அராஜகங்களையும் கூறி முறையிட்டுக் கொண்டிருப்பதையும் த‌விர்த்து, வேறு எவ்வித‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளையும் மேற்கொள்வ‌தில்லை. ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ளுக்கு எதிராக‌ அர‌சு க‌டைப்பிடிக்கிற‌ இந்த‌ அஹிம்சா கொள்கையின் விளைவாக‌ த‌ங்க‌ள் உயிர்க‌ளுக்கு ப‌துகாப்ப‌ற்ற‌ ஒரு அவ‌ல‌ நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்க‌ள் இந்திய‌ ம‌க்க‌ள். இந்தியாவின் இறையாண்மைக்கு தொட‌ர்ந்து ச‌வால் விட்டுக் கொண்டிருக்கிறார்க‌ள் பாகிஸ்தானிலும் ப‌ங்க‌ளாதேஷிலும் ப‌யிற்சி பெற்ற‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள். ஆனால் இந்திய அர‌சு இதுவ‌ரை ஒருமுறை கூட‌ ப‌தில‌டி கொடுத்த‌தில்லை. மாறாக‌ ச‌மாதான‌ம் ச‌கிப்புத்த‌ன்மை என்ற‌ பெய‌ரில் நூற்றுக்க‌ண‌க்கில், ஆயிர‌க்க‌ண‌க்கில் அப்பாவி ம‌க்க‌ளின் உயிர்ப்ப‌லி கொடுக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. இந்திய‌ அர‌சு போர்வெறி பிடித்து அலைய‌ வேண்டிய‌தில்லை; அதே ச‌ம‌ய‌ம் தொட‌ர்ந்து தாக்க‌ப்ப‌ட்டும் சாந்த‌சொரூப‌மாய் இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌மென்ன‌..? இஸ்ரேல் ம‌ட்டும‌ல்ல‌..உல‌க‌ நாடுக‌ள அனைத்துமே ப‌ய‌ங்க‌ரவா‌த‌த்தால் தாக்க‌ப்ப‌டும்போது, பொங்கி எழுகின்ற‌ன‌. ஆனால் இந்திய அரசோ உல‌க‌ நாடுக‌ளிடம் நியாய‌ம் கேட்ப‌தோடு திருப்திய‌டைந்து விடுகிற‌து. இஸ்ரேல் ம‌ற்றும் ஹ‌மாஸ், இந்தியா ம‌ற்றும் பாகிஸ்தான் ஆத‌ர‌வு பெற்ற‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் என்ற‌ இர‌ண்டும் ஒன்ற‌ல்ல‌; ஆனால், இஸ்ரேல் காட்டும் தீர‌த்தில் 5 ல் 1 ப‌ங்கை இந்தியா காட்டினால் கூட‌ போதும்; நாட்டில் ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தின் ஆணிவேர் அறுக்க‌ப்ப‌ட்டு விடும்.

பதிவு செய்தவர்: kesavan
பதிவு செய்தது: 10 Jan 2009 3:26 pm
அடுத்து sollavendiyathu இரும்பு karam konndu adkka வேண்டிய நேரம் vanthuvittathu

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India