Thats tamil

clear
clear
clear
  BSE  16,158.28 +94.38   NSE  4796.15 +30.60   RS/$ 46.96 0.24  at:16:10 Hrs (IST) Nov 6
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
உளவு விமானம் மூலம் பிரபாகரனை கண்காணிக்கும் 'ரா': திருமா.
வெள்ளிக்கிழமை, ஜனவரி 9, 2009, 15:57 [IST]

சென்னை: இந்திய உளவு அமைப்பான ரா, தனது உளவு விமானத்தை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைக் கண்காணிக்கவே பயன்படுத்தி வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்மைக் காலமாக, சிங்கள இனவெறி அரசு, ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க, இந்திய அரசு ராணுவ உதவிகளும், பண உதவிகளும் பெருமளவில் செய்து வருவது உறுதிப்பட்டு வருகிறது.

கிளிநொச்சியை விட்டு விடுதலைப்புலிகளும் பொது மக்களும் இடம் பெயர்ந்துள்ள ஓரிரு நாட்களுக்குள், இந்திய அரசின் உளவு நிறுவனமான `ரா' அமைப்பின் நவீன விமானம் ஒன்று தமிழீழத்தின் கடலோரப்பகுதிகளையும் காடுகளையும் கண்காணிப்பு ஆய்வு செய்வதற்கு 3-ம் தேதி அதிகாலை சென்னை, மீனம்பாக்கம் விமான நிலை யத்திலிருந்து சில `ரா' அதிகாரிகளுடன் புறப்பட்டுச் சென் றுள்ளது.



உயர்ந்த தொழில் நுட்ப வேவு கருவிகளைக் கொண்ட இந்த வானூர்தி இரவு நேரத்திலும், தரையில் நடந்து செல்லும் ஒருவரை மிகத்துல்லியமாக புகைப்படம் எடுக்குமளவிற்கு ஆற்றலுடையது என்று தெரிய வருகிறது.

முதல்-அமைச்சர் கருணாநிதியின் முயற்சியில் இந்திய பிரதமரை சந்தித்து அனைத்துக்கட்சித் தலைவர்களின் கோரிக்கையையும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போர் நிறுத்தத்தை வலியுறுத்திய தீர்மானத்தையும் புறந்தள்ளியது மட்டுமில்லாமல் முல்லைத்தீவுப் பகுதிகளைக் கண்காணிக்க `ரா' அமைப்பின் அதிகாரிகளை உயர் தொழில் நுட்ப உளவு விமானத்தில் அனுப்பியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

பிரபாகரனை காட்டிக் கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. தமிழீழ விடுதலைப்போரை நசுக்கவும், அதன் தலைவரை அழித்தொழிக்கவும் இந்திய அரசு வெளிப்படையாக ஈடுபட்டிருப்பது தமிழ்ச் சமூகத்தால் மன்னிக்கவே முடியாத செயலாகும்.

இந்திய அரசு, இந்தக் காட்டிக் கொடுக்கும் கேவலத்தை உடனடியாகக் கைவிடவில்லையெனில் பொங்கியெழும் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியேத் தீர வேண்டும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

வாக்குறுதி என்ன ஆனது - வீரமணி:

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து அகதிகளாக தனுஷ்கோடிக்கு தப்பி வந்த தமிழ் குடும்பத்தினர் அளித்த பேட்டி பெரும் வேதனையை ஏற்படுத்தியது.

தமிழக அனைத்துக்கட்சித் தலைவர்கள் பிரதமரிடம் அளித்த வேண்டுகோளை பரிசீலித்து பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்துக்கு மேலாகியும் அது செயல்படுத்தப்படவில்லை.

தமிழர்கள் ஏமாளிகளா?,பிரதமரின் வாக்குறுதி காற்றில் பறந்து விட்டதா? இதன் காரணமாக கடும் விலையை மத்திய அரசு பெற வேண்டியிருக்கும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: thamil nadan
பதிவு செய்தது: 10 Jan 2009 4:03 pm
தனித்து நில் நீதான் முதல்வர்

பதிவு செய்தவர்: ஆனந்த விகடன்
பதிவு செய்தது: 10 Jan 2009 12:39 pm
தமிழக அரசு இன்னமும் இருக்க வேண்டுமா?; முதல்வரின் பேச்சு நியாயமே: ஆனந்த விகடன் [வெள்ளிக்கிழமை, 09 சனவரி 2009, 09:54 பி.ப ஈழம்] [கி.தவசீலன்] இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க இயலாத தமிழக அரசு இன்னமும் இருக்க வேண்டுமா? என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்து நியாயம்தான் என்று ஆனந்த விகடன் வார இதழ் கருத்து தெரிவித்துள்ளது. ஆனந்த விகடனின் தலையங்கம்: 'ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளை ஒடுக்குகிறோம்' என்ற பெயரில், நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களின் இரத்தத்தைத் தொடர்ந்து குடித்துக் கொண்டே இருக்கிறது சிறிலங்கா இராணுவம். 'ஒரு தமிழனைக் கொன்றால், நூறு சிங்கள ஓட்டு கிடைக்கும்' என்பதே தங்கள் சூத்திரம் என சிறிலங்கா அரசு செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது. இப்போது, 'புலிகளின் கோட்டை எங்கள் கைவசம்' என்ற கொக்கரிப்பையும் கேட்க முடிகிறது. கோட்டையைப் பிடிக்கும் அந்த முயற்சியில் அப்பாவித் தமிழர்கள் எத்தனை ஆயிரம் பேர் வேட்டையாடப்பட்டார்களோ! இலங்கைத் தமிழரைப் பாதுகாக்கப் போராட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், பதவி விலகல் மிரட்டல், அனைத்து கட்சிக் கூட்டம், டெல்லிப் பயணம் என்று தமிழகத் தலைவர்கள் எடுத்துக்கொண்ட எந்த முயற்சிக்குமே மத்திய அரசு கடைசி வரை செவிசாய்க்கவில்லை. நம் இராணுவ அதிகாரிகள் அங்கு சென்று பயிற்சி தரும் தகவலையும் மத்திய அரசு மறுக்கவில்லை. 'மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கிறோம்' என்று கொடுத்த வாக்குறுதியைக்கூடத் தந்திரமாகத் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறது டெல்லி! இதையெல்லாம் பார்க்கும்போது, 'புலிகளை நாங்கள் முழுதுமாக ஒடுக்கி விடுகிறோம். அதுவரை உங்கள் தேசத்து மக்களைத் திசை திருப்பும் வகையில் கண்ணா மூச்சி அரசியல் நடத்திக் காலத்தைக் கடத்துங்கள்' என்று மத்திய அரசோடு எழுதப்படாத 'புரிந்துணர்வு ஒப்பந்தம்' ஒன்றைப் போட்டிருக்கிறதோ சிறிலங்கா அரசு என்ற பலமான சந்தேகம்தான் எழுகிறது! நினைத்ததை எல்லாம் நிபந்தனைகளாக விதித்து, குறித்த நேரத்துக்குள் சாதித்துக் கொள்கிற தமிழக ஆளுங்கட்சி, இந்த விடயத்தில் எள் முனையளவுகூட எதையும் சாதிக்கவில்லை என்பதுதான் வேதனையளிக்கும் நிதர்சனமான உண்மை! 'இதன் பிறகும் இந்த அரசு இருக்கத்தான் வேண்டுமா?' என்று பொதுக்கூட்ட மேடையில் தமிழக முதல்வர் தழுதழுத்த குரலில் எழுப்பிய கேள்வி, தமிழ் மக்களி

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India