Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
வென்றது திமுகவின் பணம்- குண்டர் படை: ஜெ
திங்கள்கிழமை, ஜனவரி 12, 2009, 18:46 [IST]

Jayalalitha
சென்னை: திருமங்கலம் இடைத் தேர்தலில் திமுகவின் பண பலம், குண்டர் படைபலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை வென்றுவிட்டன என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுகவின் பண பலம், குண்டர் படை பலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை வென்றுவிட்டன, ஜனநாயகம் தோற்றுவிட்டது என்பதைத்தான் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு தெளிவாகக் காட்டுகிறது.

7.1.09 அன்று மாலை 5 மணிக்கு மேல் வாக்காளர் அல்லாதவர்கள் தொகுதியில் இருக்கக்கூடாது, தொகுதியை விட்டுவெளியேற வேண்டும் என்பது விதி. ஆனால் திமுக அமைச்சர்கள் மற்றும் அழகிரியின் குண்டர்கள் உள்பட திமுகவினர் அனைவரும் அதன் பின்னரும் தொகுதிக்கு உள்ளேயே வலம் வந்துகொண்டிருந்தனர்.


இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறை, கட்டுப்பாடு என்பதெல்லாம் எதிர்க் கட்சிகளுக்கு மட்டும்தான் போலும்!.

திமுகவினருக்கு எந்தச் சட்டமும் பொருந்தாது என்ற அளவிற்கு திமுக அமைச்சர்கள் திருமங்கலம் தொகுதிக்குள் 7ம் தேதியன்று மாலை 5 மணிக்குப் பிறகும் பணம், தங்க நாணயம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வீடுவீடாகச் சென்று வாக்காளர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

அழகிரியின் அடியாட்களால் வாக்காளர்கள் அனைவரும் மிரட்டப்பட்டு இருக்கின்றனர். இது குறித்து அதிமுக சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதில் இருந்தே காவல்துறை கருணாநிதியின் ஏவல் துறையாகத்தான் இருக்கிறது என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

9ம் தேதி தேர்தல் முடிந்தவுடன் 30,000 முதல் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என அழகிரி அன்றே அறிவித்தது; திருமங்கலம் இடைத்தேர்தல் நல்ல செய்தியைத் தரும் என கருணாநிதி சென்னை சங்கமம் விழாவில் அறிவித்தது; வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே வெற்றி பெற்றுவிட்டதாக திமுகவினர் பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட்டது; வெற்றியை பாராட்டி விளம்பரப் பலகைகள் வைத்தது ஆகியவற்றில் இருந்தே இந்த இடைத்தேர்தல் எப்படி நடந்திருக்கும் என்பதை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

கருணாநிதி முதலமைச்சராகவும், அவரது மகன் அழகிரி நிழல் முதலமைச்சராகவும் தமிழ்நாட்டில் இருக்கின்ற வரையிலும் காவல்துறை கருணாநிதி குடும்பத்தின் ஏவல் துறையாக செயல்படும் வரையிலும், தமிழ்நாட்டில் தேர்தல் என்பது சடங்கு, சம்பிரதாயம் போலத்தான்.

தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பாடுபட்ட தோழமைக் கட்சியினருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 

 

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: முஹிதீன்
பதிவு செய்தது: 13 Jan 2009 12:08 pm
ஆமாம் நீங்கள் ரொம்ப நல்லவங்க கருணாநிதியும் அவர் மகன் அழகிரியும் அராஜக பேர்வழிகள் இனி ஒரு நிமிடம் கூட அவர்கள் ஆட்சியில் இருக்க கூடாது தங்களின் சிறந்த நிர்வாகத்தின் சில துளிகள் நீங்கள் முதல்வராக இருந்த சமயத்தில் கும்பகோணத்தில் மகா மகா குளத்தில் என்ன நடந்தது ? நீங்கள் வருவதற்கு அறைமநிநேரமுன்பகவே சென்னை முழுவதுமே போக்குவரத்தை நிருதுவீர்களே உங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்த உடனே ஒரு கலூரி பேருந்தை எரிதத்து யார் நீங்கள் மக்கள் அவதி படும் சூழ்நிலையில் யானையை குசி படுத்த ஆணையிட்டவர் ஆச்சே சோ சுப்ரமணிய ராமசுவாமி இவர்களின் பேச்சை கேட்டு ஆடு கோழி வெட்ட தடை , மத மற்ற தடுப்பு சட்டம் இபோ உங்க கூட இருக்கும் வலது இடது சாரிகளை நம்பிய அரசாங்க உளியர்களை கைது செய்தது ஏன் உங்கள் ஆடிடரையே செருப்பால் அடித்து இது போன்ற நிகழ்வை செயல் படுத்த நீங்கள் தமிழகத்தை ஆழ வர வேண்டும்

பதிவு செய்தவர்: தமிழன்
பதிவு செய்தது: 13 Jan 2009 10:27 am
அம்மானு பார்க்கிறேன் இல்லேனா உன்ன பதம் பார்த்துடுவேன் டீ கொழுத்த உடம்புகார்ரி

[ Post Comments ]
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India