clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

செல்போன் டவரிலிருந்து குதிக்க முயன்ற மாணவர் கைது

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 3, 2009, 15:01[IST]
Vote this article
Up  
Down  


திருநெல்வேலி: இலங்கைத் தமிழர்களைக் காக்கக் கோரி செல்போன் டவரிலிருந்து குதிக்கப் போவதாக மிரட்டிய மாணவரை போலீஸார் மீட்டு கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே உள்ள கே.கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (23). இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் எம்.சி.ஏ. பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார்.

நெல்லை வந்த மாணவர் பாலமுருகன், ஸ்ரீ புரத்தில் உள்ள தனியார் செல்போன் நிறுவன டவரின் மேல் ஏறி நின்று கொண்டு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.

மேலும், கையில் வைத்திருந்த ஜெராக்ஸ் நகலை வீசியவாறு நான் இலங்கை தமிழர்களுக்காக கீழே குதித்து தற்கொலை செய்ய போகிறேன் என்று கத்தினார்.

தகவல் அறிந்ததும், போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர்.

அவர்கள் பாலமுருகனிடம் சமரசம் பேசினார்கள். மறுபுறம் தீயணைப்பு வீரர்கள் ஏணிப்படி வழியாக மேலே ஏறி பாலமுருகனை வளைத்துப் பிடித்தனர்.

கீழே கொண்டு வரப்பட்ட பாலமுருகனை கைது செய்த போலீஸார் அவர் மீது தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Hypocrite
பதிவு செய்தது: 04 Feb 2009 9:05 am
LTTE chief Velupillai Prabhakaran lived in the lap of luxury, even as his guerrilla force fought pitched battles with the Sri Lankan அறமி, A fully air-conditioned structure with four furnished compartments, the bunker had surveillance cameras, an oxygen plant, an insulin container and a deep-freezer. There were also three sound-proof power generators and an M-16 machine gun. The Lankan military also reported discovering an LTTE prison, which indicated the presence of a possible torture chamber.

பதிவு செய்தவர்: தியாகி
பதிவு செய்தது: 04 Feb 2009 8:51 am
தற்கொலை செய்து கொள்ளும் பைத்தியங்களுக்கு அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் பண உதவியும் பட்டமும் தருவதால் இந்த மாதிரி பைத்தியங்கள் வூக்க படுத்தபடுகின்றன . தற்கொலைக்கு முயற்சி செய்யும் பைத்தியங்கள் மன நோய் காப்பகத்தில் உடனே சேர்க்க பட வேண்டும். இவர்களுக்கும் தமிழ் உணர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தற்கொலை செய்து கொள்பவர்களை கண்டிக்கும் மன பக்குவம் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் வேண்டும்.

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்