clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

'கூடையால் தோத்துட்டோம்'-தேமுதிக வழக்கு

புதன்கிழமை, ஜூலை 15, 2009, 9:40[IST]
Vijayakanth
Vote this article
Up  
Down  


சென்னை: முரசு சின்னமும் கூடை சின்னமும் ஒரே மாதிரியாக இருப்பதால் பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்படாமல் தடுக்க சுயேச்சை வேட்பாளர்களுக்கு கூடை சின்னம் ஒதுக்குவதை நிறுத்த வேண்டும் என்று தேமுதிக வழக்கு தொடர்ந்துள்ளது.

பொள்ளாச்சியை சேர்ந்த பெஞ்சமின் ஜேக்கப் என்ற தேமுதிக பிரமுகர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஊட்டி சட்டசபை தொகுதியில் தேமுதிக சார்பில் முரசு சின்னத்தில் போட்டியிட்டேன். அதே தொகுதியில் சுயேச்சை வேட்பாளருக்கு கூடை சின்னம் ஒதுக்கப்பட்டது. கூடை சின்னமும் முரசு சின்னமும் ஒன்றுபோல் இருந்ததால் வாக்காளர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் முரசு சின்னத்தில் வாக்களிப்பவர்கள் பலர் கூடை சின்னத்தில் வாக்களித்து விட்டனர்.

அதே போல மக்களவைத் தேர்தலிலும் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு கூடை சின்னம் ஒதுக்கியதால் தேமுதிக தனது வாக்குகளை இழந்தது.

இதன்மூலம் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு கூடை சின்னம் ஒதுக்கப்படுவதால் தேமுதிக தனது வாக்குகளை இழப்பது தெரிகிறது.

எனவே தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு கூடை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை மனு கொடுத்தேன். எனது கோரிக்கையை பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதி சுகுணா, இது குறித்து இதுபற்றி 4 வாரத்தில் பதில் தருமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டார்.



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: சாம்
பதிவு செய்தது: 16 Jul 2009 7:36 pm
காசு வாங்குனதை மறைக்க என்னவெல்லாம் சொல்கிறார்.

பதிவு செய்தவர்: தமிழர் நலம் விரும்பி
பதிவு செய்தது: 16 Jul 2009 10:55 am
திமுகவின் பினாமி கட்சி தேமுதிக. அரிசி மூட்டை விஜயகாந்த். பேசாம கடைய சாரி கட்சிய இழுத்து மூடும். எதுக்கு வெட்டியா அறிகைய விட்டுட்டு இருக்கே.

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்