சென்னை: தமிழகத்தில் பருவமழை குறைந்துவிட்டதால் பயிர்களை காக்க 18 மாவட்டங்களில் விவசாய பம்பு செட்டுகளுக்கு 50 சதவீத டீசல் மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இந்த மானியம் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் வழங்கப்படும். இதற்காக தமிழக அரசு ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன் மூலம் தஞ்சாவூர் அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, தூத்துக்குடி, வேலூர், ராமநாதபுரம், நாமக்கல், கரூர் ஆகியவை உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகள் பலன் பெறுவர்.