clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

காஷ்மீர்-3 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

திங்கள்கிழமை, செப்டம்பர் 28, 2009, 15:26[IST]
Vote this article
Up  
Down  


ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் இன்று பாதுகாப்பு படையினருக்கும், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் மற்றும் 3 மனித வெடிகுண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்கு 40 கிமீ தெற்கே உள்ள தரால் நகர் பகுதியில் ஏற்பட்டது.

இங்கு தீவிரவாதிகள் ஒரு வீட்டில் தங்கியிருக்கின்றனர். அவர்கள் தற்கொலை படையினர் என்றும், பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்திருப்பதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் குறிப்பிட்ட அந்த வீட்டை சுற்றி வளைத்த போது, உள்ளே பதுங்கியிருந்த தீவிரவாதிகள் தாக்குதலை துவக்கினர். போலீஸாரும் பதிலுக்கு கடுமையான தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் வீட்டில் பதுங்கியிருந்த 3 மனித வெடிகுண்டு தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர். அந்த வீட்டு சொந்தக்காரரின் மனைவியும் பலியானார். மேலும், நான்கு போலீஸாருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி பரூக் அகமது என்பவர் கூறுகையி்ல்,

பலியான தீவிரவாதிகள் மூவரும் தற்கொலை படை தாக்குதல் நடத்தி திட்டமிட்டிருந்தனர். அவர்களில் இருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்றார்.



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: jeeva
பதிவு செய்தது: 28 Sep 2009 9:22 pm
This is not suffiecient , India should attack whole pakistan ! ISI, Laksar head quarters. All hindu pandids should get their own place to kashmir. JAY BARATH

பதிவு செய்தவர்: Inncocent definition from holy
பதிவு செய்தது: 28 Sep 2009 8:09 pm
All my religion people are nice people. They will never do evil things. They pray so many times. so there is no scope for social ills. All the countries which embrace my rel1g1on are peaceful countries. All other re1g1ion people are evils, fake encounter guys. They are jealous of my peaceful re1g1on. Irattai gopuram was done by isrel . All Iraq,somalia blas done by xians. All india blasts done by hindus.

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!