clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

காங்கிரசிடம் 'பம்மிய' திமுக-மதுரை கூட்டம் 'டாபிக்' மாற்றம்

சனிக்கிழமை, அக்டோபர் 24, 2009, 15:01[IST]
Alagiri
Vote this article
Up  
Down  


சென்னை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ராமேசை கண்டித்து நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட கண்டன பொதுக் கூட்டத்தை, ''முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு: மதுரை மாநகரில் மாபெரும் பொதுக் கூட்டம்'' என்று மாற்றி காங்கிரசிடம் 'பம்மியுள்ளது' திமுக.

காங்கிரஸ் தலைமையில் கோபத்தால் திமுக தனது நிலையை மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது.

முன்னதாக இந்தக் கூட்டத்தை திமுக அறிவித்தவுடன் ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவின் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டை ஆரம்பித்தது.

காங்கிரசின் இந்த 'அதிர்ச்சி வைத்தியம்' காரணமாகவே திமுக தலைமை தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது.

மத்திய அமைச்சருக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் என்பதற்கு பதிலாக, முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு: மதுரை மாநகரில் மாபெரும் பொதுக் கூட்டம் என்று கூட்டத்தின் 'டாபிக்' மாற்றப்பட்டுள்ளது.

நவம்பர் 1ம் தேதி மதுரை மேலமாசி வீதி- வடக்கு மாசி வீதி சந்திப்பில் நடக்கும் இக் கூட்டத்துக்கு மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி பங்கேற்கும் இக் கூட்டத்தில் மாநில அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் கவுஸ்பாட்சா, போடி லட்சுமணன், மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன், மூக்கையா, கம்பம் செல்வேந்திரன், பொன்.முத்துராமலிங்கம், சேடப்பட்டி முத்தையா உள்ளிட்டோர் பேசவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டம் சரியே-தங்கபாலு:

இந் நிலையி்ல இன்று சென்னையில் நிருபர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு,

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் காங்கிரஸ் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. தமிழர்களின் உரிமை நிலை நாட்டப்பட வேண்டும். உரிமை பாதிக்கப்படக் கூடாது. 2 மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேச வேண்டும் என்று பிரதமருக்கு நான் ஏற்கனவே கடிதம் எழுதி இருக்கிறேன்.

அமைச்சர் ஜெயராம் ரமேசுக்கு எதிராக மதுரையில் திமுகபொதுக் கூட்டம் நடத்துவதிலும், அதில் முதல்வர் பங்கேற்று பேசுவதிலும் தவறு ஏதும் இல்லை.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உள்ளது. மத்திய அரசிடம் நியாயம் கேட்பதில் தவறில்லை. இதில் பிரதமர் தலையிட்டு சரியான தீர்வு காண வேண்டும் என்று நாங்களும் வலியுறுத்தி இருக்கிறோம்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருப்பதால் இதற்கு மேல் எதுவும் சொல்ல இயலாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுத்திருக்கக்கூடாது என்பது எங்கள் கருத்து.

சிபிஐ ரெய்ட்-நோ கமெண்ட்ஸ்:

மத்திய அமைச்சர் ராசா அலுவலகத்தில் சிபிஐ நடத்திய ரெய்ட் பற்றி கருத்து சொல்ல விரும்ப வில்லை. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடே எங்கள் நிலைப்பாடு என்றார்.

&13;


User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Theory
பதிவு செய்தது: 27 Oct 2009 10:27 am
மு.க. அழகிரியின் தியரி’ என்ற கட்டுரையில், “ஓட்டர்களையே விலைக்கு வாங்கும் பணம் தியரி யாருக்கு வரும்? தாதா, ரௌடியிஸம் எதுவும் இல்லாமல், அவரால் எப்படி ஒரு புது தியரியை உருவாக்க முடிந்தது என்று எதிரிகளே அசந்து போய்விட்டார்கள். பெயருக்குக் கூட காசு அவிழ்க்காத கலைஞரின் வாரிசில் இப்படியொரு பிள்ளையா? பணம் பாதாளம் வரை பாயும் என்ற பழமொழி எல்லோருக்கும் தெரியும். ஆனால், பணம் மக்களின் மனம் வரை பாயும் என்பதை, அழகிரி ஒருவரால்தான் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால்தான் சொல்கிறோம், கலைஞரின் மைந்தா வா! தலைமை ஏற்

பதிவு செய்தவர்: சுயநலம்
பதிவு செய்தது: 26 Oct 2009 9:48 pm
இன்னும் கருணாநிதியின் சுயநலத்தை உன்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை என்றால் தமிழா இப்போதே எங்காவது பொய் வசிக்க இடம் தேடி கொள் எனென்றால் இனி தமிழ் நாடு என்று ஓன்று வரைபடத்தில் கூட இருக்காது

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!