clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

ரேஷன் கடைகளிலிலும் பருப்பு விலை உயர்வு!

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 3, 2009, 17:26[IST]
Vote this article
Up  
Down  


சென்னை: கொள்முதல் விலை அதிகரித்ததால், ரேஷன் கடைகளில் உளுந்து மற்றும் துவரம் பருப்பு விலை உயர்ந்துள்ளது.

வெளிச் சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில், துவரம் பருப்பு கிலோ ரூ.32க்கும், உளுத்தம் பருப்பு ரூ.36க்கும் வழங்கப்பட்டு வந்தது. ஆனாலும் வெளிச்சந்தையில் இந்த பருப்புகளின் விலை குறையவில்லை.

மாறாக ரேஷன் கொள்முதல் செய்யும் இடங்களிலும் இந்த பருப்புகளின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. துவரம் பருப்பு கொள்முதல் விலை ஆரம்பத்தில் ரூ.40 முதல் ரூ.50 வரை இருந்தது. ஆனால் இப்போது ரூ.80 அளவுக்கு விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.

&13;

அதேபோல உளுத்தம் பருப்பும் ரூ.40 முதல் ரூ.45 வரை இருந்தது இப்போது ரூ.70 வரை உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக ரேஷனிலும் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்புகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 1ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டுமே கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது. துவரம் பருப்பு கிலோவுக்கு ரூ.8ம், உளுத்தம் பருப்பு கிலோவுக்கு ரூ.4ம் உயர்ந்துள்ளது.



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: ram
பதிவு செய்தது: 03 Nov 2009 10:57 pm
பருப்பு விலை இன்னும் ஏற்றினால் கள்ள சந்தை குறையும்

பதிவு செய்தவர்: விக்ரம்
பதிவு செய்தது: 03 Nov 2009 6:31 pm
ஏய் பருப்பு அடங்கு

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!