சென்னை: திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுடனேயே வந்தவாசிக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.
திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏபதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் இணைந்ததால் அங்கு ஜனவரி 30ம் தேதிக்குள் இடைத் தேர்தல் நடக்கவுள்ளது.
இந் நிலையில், வந்தவாசி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெயராமன் மரணமடைந்ததால் இத்தொகுதியும் காலியாகி உள்ளது. இதனால் திருச்செந்தூர் தொகுதியுடன் வந்தவாசி தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டமன்றத்தில் கட்சிகள் நிலவரம்:
திமுக-97
அதிமுக-57
காங்கிரஸ்-36
பாமக-18
மார்கசிஸ்ட் கம்யூனி்ஸ்ட்-9
இந்திய கம்யூனிஸ்ட்-6
மதிமுக-3
விடுதலை சிறுத்தைகள்-2
தேமுதிக-1
சுயேச்சை-1
எந்த கட்சியையும் சேராதவர் (எஸ்.வி. சேகர்)-1
ஆங்கிலோ இந்திய நியமன எம்எல்ஏ-1
சபாநாயகர்-1
காலி இடங்கள்-2
மொத்தம்-235