Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » முழு விபரம்
ஈரான் தலைநகர் இடம் மாறுகிறது!

Tehran
தெஹ்ரான்: ஈரான் தலைநகர் தெஹ்ரான் அடிக்கடி நிலநடுக்கங்களால் பாதி்ப்புக்குள்ளாகி வருவதால் தலைநகரை இடம் மாற்ற அந் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

கடும் நில நடுக்கப் பகுதியி்ல் அமைந்துள்ள நிதெஹ்ரானை படுமோசமான நிலநடுக்கம் தாக்கும் என்று சர்வதேச புவியியல் நிபுணர்கள் எச்சரித்து வருவதால் ஈரான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதையடுத்து தலைநகரை இடமாற்றம் செய்யலாம் என்று அந் நாட்டு மத-அரசியல் தலைவர் ஆயதுல்லா கொமேனி தெரிவித்த யோசனையை அந் நாட்டு அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டுவிட்டது.

புதிய தலைநகர் எங்கு அமையும் என்று தெரியவில்லை.

ஈரானிய அரசியல்-சமூக வரலாற்றில பல தலைநகரங்கள் இருந்து வந்துள்ளன. இதில் இஸ்பகான், கஸ்வின், ஷிராஸ், மஷ்ஷத், ஹமேடான் ஆகியவை அடங்கும்.

கடைசியாக 1795ம் ஆண்டில் நாட்டை ஆண்ட ஆகா முகம்மத் கான் தான் தெஹ்ரானை தலைநகராக்கினார். அன்று முதல் தெஹ்ரானே இந் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதா, கலாச்சாரத் தலைநகராக விளங்கி வருகிறது.

இப்போது இந்த நகரில் 1.2 கோடி பேர் வசித்து வருகின்றனர். கடந்த 2003ம் ஆண்டு இந்த நகரில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 40,000 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்தே தலைநகரை மாற்றினால் தான் தெஹ்ரானில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்து உயிர் பலிகளையும் குறைக்க முடியும் என்ற யோசனைகள் தீவிரமாயின.

பூமிக்கு அடியில் நூற்றுக்கும் மேற்பட்ட நகரும் பெரும்பாறைத் திட்டுக்களின் மீது தான் தெஹ்ரான் அமைந்துள்ளது. இந்த நகரும் திட்டுக்களால் தான் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

அடிக்கடி நகர்ந்து இவை மிகவும் இலகுவாகிவிட்டதால் விரைவிலேயே வரலாறு காணாத அளவுக்கு இப் பகுதியில் பூகம்பம் ஏற்படலாம் என்கிறார்கள்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: தீர்கமான ஆட்சியாளர் தேவை
பதிவு செய்தது: 04 Nov 2009 12:36 pm
தனது சொந்த பலத்தை கொண்டு அமெரிக்க உள்ளிட்ட ஏகாத்திய பட்டிய நாடுகளை எல்லாம் வலிமையுடன் எதிர்த்து வரும் ஈரானை nitsayam paarattiye aaka வேண்டும்.ஈரானிற்கு உள்ள துணிவில் சிறிதளவாவது நம்மிடம் இருந்தால் நாம் நிட்சயம் வல்லரசு ஆகிவிட முடியும்.மற்ற படி அவர்கள் ஏக்டியபத்டியம் கொடுக்கும் தாக்குதலுக்கு பயந்து கொண்டே இருந்தால் நமக்கு மரியாதையும் கிடக்கது.வல்லரசு என்ற பட்டமும் கிடையாது.வெறும் ஏட்டளவில் மட்டுமே வல்லரசு இருக்கும்.சிறந்த ஆட்சியாளர் களால் மட்டுமே நம் நாடு முன்னேறும்.மற்றபடி கடினம்.

பதிவு செய்தவர்: xxx
பதிவு செய்தது: 03 Nov 2009 11:30 pm
பூமிக்கு அடியில் கூட ஆயுத போட்டி ஆரம்பித்துவிட்டது சுனாமி போல பேரலையை ஒருவாக்கும் திட்டம் கூட வல்லரசு ஆகும் ஆகிவிட்ட நாட்டும் உண்டு சில நாடுகள் பயிற்சி மேற்கொண்டும் உள்ளன. சீனா அமெரிக்கா பிரான்ஸ் ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா போல இந்திய யும் முயச்சி மேகொள்ள இருக்கிறது

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India