Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » வர்த்தகம் » முழு விபரம்
கள்ளப் பணம்- ஸ்விஸ் அதிகாரிகளை சந்திக்கும் பிரணாப்

டெல்லி: ஸ்விஸ் வங்கிகளில் குவிந்து கிடக்கும் இந்தியர்களின் கள்ளப் பணத்தை வெளிக் கொணருவதற்காக ஸ்விஸ் நாட்டு அதிகாரிகளை சந்திக்கிறார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.

டிசம்பர் மாதம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. அப்போது இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தத்தை உருவாக்கிக் கொள்வது தொடர்பாக முக்கியமாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

இந்த உடன்படிக்கையின் மூலம் ஸ்விஸ் வங்கிகளில் குவிந்து கிடக்கும் பல ஆயிரம் கோடி பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர வழி ஏற்படும்.

ஸ்விஸ் வங்கிகள் தவிர இதேபோன்ற வரிவிதிப்பு இல்லாத பிற நாட்டு வங்கிகளில் குவிந்து கிடக்கும் இந்தியப் பணத்தையும் வெளிக் கொணர முடியும்.

இதுகுறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில், டிசம்பர் முதல் வாரத்தில் இந்த சந்திப்பு நடைபெறும். 10-11 ஆகிய தேதிகளில் இந்த சந்திப்பு நடைபெறும்.

எவ்வளவு பணம் அங்கு இருக்கிறது என்பது குறித்து 1985ம் ஆண்டுதான் கணக்கிடப்பட்டது. அதன் பிறகு இதுகுறித்து கணக்கிடப்படவில்லை. எனவே எவ்வளவு பணம் இருக்கிறது என்ற கணக்கு தற்போது அரசிடம் இல்லை என்றார் பிரணாப்.

ஆனால், கிட்டத்தட்ட ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 75 ஆயிரம் கோடி வரை ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் குவிந்து கிடப்பதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி ஏற்கனவே கூறியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Anto
பதிவு செய்தது: 05 Nov 2009 10:29 am
First try to arrest the cheating guy former CM. Madhu Koda who is acting in the hospital bed. Here itself no progress why they are trying to jump over the fence.

பதிவு செய்தவர்: நான்தான் நம்பர் ஒன்
பதிவு செய்தது: 04 Nov 2009 9:31 pm
இந்த லிஸ்டுல நான்தான் முதல் ஆளு. நான் யார்?

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India