Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்
அம்பானிகள் வழக்கு-2 நீதிபதிகள் விலகல்!
Read  In English

டெல்லி: கேஜி படுகை எரிவாயு விலை நிர்ணயம் குறித்து தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி. ரவீந்திரன் திடீரென அதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து தற்போது நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவும் விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் முகேஷ் அம்பானிக்காக ஆஜராகும் சட்ட நிறுவனத்துடன் தனது மகள் தொடர்பு வைத்திருப்பதால் இந்த வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாக ரவீந்திரன் அறிவித்திருந்தார்.

இன்று இந்த வழக்கு நீதிபதி ரவீந்திரன் இடம் பெற்றிருந்த பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கிலிருந்து நான் விடுபடுகிறேன். நேற்றுதான், முகேஷ் அம்பானி குழுமத்திற்காக சட்ட ஆலோசனைகளை வழங்கி வரும் நிறுவனத்துடன் எனது மகள் சம்பந்தப்பட்டிருப்பது எனக்குத் தெரிய வந்தது. எனவே இதிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தார் நீதிபதி ரவீந்திரன்.

கட்ஜுவும் விலகல்:

இந்த நிலையில் தற்போது இன்னொரு நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜுவும் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

தனது மனைவிக்கு ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பங்குகள் இருப்பதால் வழக்கிலிருந்து விலகுவதாக கட்ஜூ அறிவித்துள்ளார்.

இந்த வழக்குக்கான பெஞ்ச்சே கட்ஜு தலைமையில்தான் இயங்கி வந்தது. வழக்கை விசாரித்த கட்ஜூ தலைமையிலான பெஞ்ச் கடந்த செப்டம்பர் 1ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த நிலையில், தற்போது இரு நீதிபதிகள் விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: staline
பதிவு செய்தது: 04 Nov 2009 9:30 pm
Neethipathiyai விலை koduthu வாங்கிவிட்டார்கள். ஏன் neethipathi முன்னம்மா சொல்ல vendiyathuthane, engalukkum ரிலையன்ஸ்க்கும் thodarpu உள்ளது என்று. Indiayargalai முட்டளக்கதீர்கள்.

பதிவு செய்தவர்: HONESTY
பதிவு செய்தது: 04 Nov 2009 4:24 pm
ஜட்ஜ் நியாயமாக இருக்கிறார் நாட்டிற்கு நல்லது

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India