கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழர்கள் வசிக்கும் வன்னி, கிளிநொச்சி, முல்லைத் தீவு பகுதிகளில் திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
ராணுவத்தின் 65வது பிரிவின் தலைமையகம் அமைந்துல்ள வன்னி துணுக்காய் பகுதிக்குச் சென்ற அவர் ராணுவ வீரர்களை சந்தித்துப் பேசினார்.
மேலும் அப் பகுதியில் பள்ளிக்கூடம், கோவில்களில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டு்ள்ள இடங்களையும் அவர் பார்வையிட்டார். முகாமில் உள்ள சிலருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அதன் பிறகு கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய இடங்களுக்குச் சென்று ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார்.
ராஜபக்சேவுடன் அவரது தம்பியும், பாதுகாப்பு துறை செயலாளருமான கோதபயா ராஜபக்சே, தரைபடை தளபதி ஜெகத் ஜெயசூரியா, விமானபடை தளபதி குணதிலகா ஆகியோரும் சென்றிருந்தனர்.