Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
அசோக சக்கரத்தை எடுத்து விட்டு ராகுல்- ப.சி படம்!

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் ஆர்வக் கோளாறில் தேசியச் சின்னமான அசோக சக்கரத்தை எடுத்து விட்டு அதற்குப் பதில் ராகுல் காந்தியையும், கார்த்தியின் அப்பா ப.சிதம்பரத்தையும் போட்டு அமர்க்களப்படுத்தியுள்ளனர்.

இதற்கு முன்பு மதுரையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தின்போது, கூட்டம் கூட்டுவதற்காக நடனப் பெண்களை அழைத்து வந்து குத்தாட்டம் போட வைத்து கலக்கினர் கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள். இதனால் பெரும் முனுமுனுப்பு எழுந்தது. காங்கிரஸ் மேலிடமும் இதை ரசிக்கவில்லை.

இந்த அட்டகாசம் நடந்து ஒரு வாரம் கூட ஆகியிராத நிலையில் அடுத்து ஒரு அட்டகாசத்தை அரங்கேற்றியுள்ளனர் கார்த்தி சிதம்பரம் அன் கோவினர்.

இந்திரா காந்தியின் 25வது நினைவு நாளையொட்டி நடந்த நிகழ்ச்சிகளில் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். சிவகங்கை மாவட்டத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்காக மாவட்டம் முழுவதும் ஏகப்பட்ட பிளக்ஸ் போர்டுகளையும், போஸ்டர்களையும் போட்டுக் கலக்கியிருந்தனர் கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்கள்.

அதில், இந்தியாவின் தேசியச் சின்னமான அசோக சக்கரத்திற்குப் பதில் ப.சிதம்பரத்தையும், ராகுல் காந்தியையும் போட்டு வைத்திருந்தனர். இந்த பைத்தியக்காரத்தனத்தைப் பார்த்து மக்கள் தலையில் அடித்துக் கொண்டனர்.

காங்கிரஸ்காரர்களின் இந்த செயலை பெரும் பிரச்சினையாக்க தற்போது பாஜகவினர் கிளம்பியுள்ளனராம்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: தட்ஸ் தமிழ்
பதிவு செய்தது: 06 Nov 2009 12:25 pm
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் தேசியச் சின்னமான அசோக சக்கரத்தை எடுத்து விட்டு அதற்குப் பதில் ராகுல் காந்தியையும், கார்த்தியின் அப்பா ப.சிதம்பரத்தையும் போட்டு அவமானப்படுத்தியுள்ளனர். இப்படி எழுதுங்க ஆசிரியரே.

பதிவு செய்தவர்: Munyosanai
பதிவு செய்தது: 06 Nov 2009 11:35 am
Pongada MahathmaGandhi-e Suthanthiram வாங்கி kuduthathu Ithukuthaan! K.S.Azhahari,M.P, yentru ஒரு தமிழ் pesum Thurohi நமது tamilnaatil tamilan yentru olavi கொண்டு irukiraan! Avanai serupaal adikaamal! Vedikai paarthukondu irukiereergale ஏன்! Soniyavin karuthaium RAW-vin karuthaium indiavil பரபிகொண்டிருகிறான்! தமிழ் moodargale K.S.Azhzhari எனும் Kootikoduthavanai Indiavai vitte Veli yetungal!

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India