Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » முழு விபரம்
நியூஜெர்சி, விர்ஜீனியா ஆளுநர் தேர்தலில் ஒபாமா கட்சி தோல்வி

வாஷிங்டன்: அமெரிக்காவின் விர்ஜீனியா மற்றும் நியூஜெர்சி மாகாண ஆளுநர் தேர்தலில் அதிபர் பாரக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதனால் ஒபாமா ஆதரவாளர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

அதிபர் தேர்தலின்போது நியூஜெர்சியில்தான் ஜனநாயகக் கட்சிக்கு பெருமளவில் வாக்குகள் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் ஒபாமா தரப்பை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

விர்ஜீனியா மாகாண தேர்தலில் எதிர்கட்சியான குடியரசுக் கட்சி வேட்பாளர் பாப் மெக்டனால் வெற்றி பெறுவது உறுதி என ஏற்கனவே கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், நியூஜெர்சியில் இரு கட்சி வேட்பாளர்களும் சம நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இரு இடங்களிலும் தற்போது ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

விர்ஜீனியாவில் குடியரசுக் கட்சி வேட்பாளர் பாப் மெக்டொனால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் கிரேக் டீட்ஸை எளிதில் வீழ்த்தினார்.

நியூ ஜெர்சியில் குடியரசுக் கட்சியின் கிறிஸ் கிறிஸ்டி கடும் போட்டிக்கு மத்தியில், தற்போதைய ஆளுநரான ஜனநாயகக் கட்சியின் ஜான் கோர்ஸைனை வென்றார்.

ஒபாமா அதிபராக பதவியேற்று ஒரு வருட காலத்திற்குள்ளேயே இந்த நிலை ஏற்பட்டிருப்பது ஜனநாயகக் கட்சியினரிடையே கவலையை தோற்றுவித்துள்ளது.

என்ன காரணம்...?

அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது அமெரிக்க மக்களுக்கு அளித்த பல வாக்குறுதிகளை ஒபாமா நிறைவேற்றத் தவறியதே அவரது கட்சியின் தோல்விக்குக் காரணமாக கருதப்படுகிறது.

குறிப்பாக 3 முக்கிய வாக்குறுதிகளை அமெரிக்க வர்க்கத் துறையினர் எடுத்து வைக்கிறார்கள்.

- தனது பிரசாரத்தின்போது சிறிய வர்த்தக நிறுவனங்களுக்கு பெருமளவில் பிசினஸ் காண்டிராக்டுகளைத் தர வேண்டும். பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே அவற்றைத் தொடர்ந்து தரக் கூடாது. நான் ஆட்சிக்கு வந்தால் இதை சட்டத் திருத்தம் மூலம் அமல்படுத்துவேன் என்று கூறியிருந்தார் ஒபாமா. ஆனால் இது நாள் வரை அப்படி எந்த சட்டத் திருத்தத்தையும் அவர் கொண்டு வரவில்லை.

இதன் காரணமாக கிட்டத்தட்ட 29 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான காண்டிராக்டுகள் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே போயுள்ளன. ஒபாமா தனது பதவியில் ஓராண்டை முடிக்கும்போது இது 100 பில்லியன் டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

- பெண்களைத் தலைவர்களாக கொண்டு நிர்வகிக்கப்படும் நிறுவனங்களுக்கு அரசின் காண்டிராக்ட் ஒதுக்கீடுகளில் 5 சதவீதம் அளிக்கப்படும் என்று கூறியிருந்தார் ஒபாமா. ஆனால் இதுவரை அப்படி ஒரு திட்டத்தை அவர் அமல்படுத்தவே இல்லை.

- சிறுபான்மையினருக்கான அரசின் உதவி நிதித் திட்டத்தை தற்போது நிறுத்த உத்தரவிட்டுள்ளார் ஒபாமா. மேலும், சிறுபான்மையினருக்கான அரசின் காண்டிராக்டுகளை வெறும் 5 சதவீதமாக குறைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது ஒபாமா சார்ந்த ஆப்பிரிக்க - அமெரிக்கர்கள்தான். ஒபாமாவின் உத்தரவால், ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க அமெரிக்க சிறு தொழில் முனைவோர் தங்களது நிறுவனங்களையே மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனராம்

இரு மாகாண ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி தோல்வியைச் சந்தித்திருப்பது ஒபாமாவுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அவரது செல்வாக்கு சரிந்து விட்டதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: சிவா
பதிவு செய்தது: 07 Nov 2009 5:42 pm
வாக்கு கொடுத்தவர் வரம்பு மீறினால் வாக்கு போட்டவர் என்ன செய்யவேண்டுமோ அதையே செய்வார் "வாக்கு போட்டவன்" ஒரூ நாள் கவிழது விடுவான் இதை குறு வது அரசன் அன்றறுப்பான் தேய வம் நின்றறுக்கும் என்பதை போன் ற்து -இது தெய்வம் செய்வதில்லை மக்களும் மக்கள் திட்டமிட்டு தங்களின் கையால் அளிக்கும் வாக்கி இருக்கின்றது மக்களே துக்கி விடுபவர் அவர்களே துக்கிய பாதாளத்தில் இவர்களைஎனதள்ள குடாது? தள்ளி விடுங்க.

பதிவு செய்தவர்: நிகோலஸ்பிகிராடோ
பதிவு செய்தது: 07 Nov 2009 3:07 pm
பணக்காரர் ஆதிக்கமுள்ள நாடு மெதுவாகத்தான் நகர்வு நடக்கும் போதாத காலம் பொருளாதாரம்

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India