மும்பை: 100 ஆண்டுகள் பெருமை மிக்க பிர்லா குழுமம் முதல் முறையாக ஓட்டல் வர்த்தகத்தில் நுழைகிறது.
டாடா குழுமத்துக்கு நிகரான பாரம்பரியம் மிக்க தனியார் நிறுவனம் பிர்லா குழுமம். பல கிளைகளாக இந்தக் குழுமம் பிரிந்திருந்தாலும், ஜவுளித்துறை தொடங்கி உலோகத் துறை வரை வர்த்தக உலகின் அனைத்துப் பிரிவுகளிலும் அதிரடியாக தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகிறது.
இப்போது பிர்லா குழுமத்தின் ஒரு பிரிவான பிகே பிர்லா மும்பையில் வொர்லி பகுதியில் மிகப் பெரிய சொகுசு ஓட்டல் ஒன்றை கட்டுகிறது.
இந்தப் பகுதியில் முதலில் செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ் மில் அமைந்திருந்தது. மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் இது. ஆனால் சுற்றுச் சூழல் காரணங்களுக்காக இந்த மில் மூடப்பட்டுவிட, இப்போது அந்த இடத்தில்தான் ஓட்டல், ரியல் எஸ்டேட் என புதிய வர்த்தகத்தில் இறங்கப்போகிறது பிர்லா குழுமம்.
இந்த ஓட்டலை உருவாக்கி வேறு நிர்வாகத்திடம் தரப் போகிறார்களாம் பிர்லா குழுமத்தினர். இதற்கென பெரிய தொகை ஒன்று வருடாந்திர கட்டணமாக பிர்லாவுக்கு தரப்படும்.
விரைவில் இதற்கான பணி துவங்கும் என பிகே பிர்லா தெரிவித்துள்ளார்.
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !