Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » வர்த்தகம் » முழு விபரம்
அமெரிக்காவில் 27 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மை!

US unemployment rate hits 10.2%
வாஷிங்டன்: அமெரிக்கப் பொருளாதாரம் சரியான திசையில் பயணிப்பதாக அதிபர் ஒபாமா சொல்லி வாய் மூடும் முன்பே, அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் 27 ஆண்டுகளில் காணாத உயர்வைக் கண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த அக்டோபர் மாதம் மட்டும் வேலை இழப்பின் அளவு 10.2 சதவிகிதத்தை எட்டியுள்ளது.

அமெரிக்க தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இந்த மாதம் மட்டும் 190000 பேர் வேலை இழந்துள்ளனர்.

இது அமெரிக்க பொருளாதார நிபுணர்களின் கணிப்பைவிட 2 சதவிகிதம் அதிகம்.

"நிச்சயம் இது கவலைப்படத்தக்க விஷயமே. அமெரிக்க நிர்வாகம் உடனடியாக இதில் ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புதிய நிதிச் சலுகைகளை அரசு அதிகரித்தாக வேண்டும்" என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் வேலை இழப்புகள் தொடர்ந்து 22 மாதங்களாக அதிகரித்தபடி உள்ளதுதான் ஒபாமா நிர்வாகத்தை பெரிதும் பயமுறுத்தி வருகிறது.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 08 Nov 2009 11:14 am
அமெரிக்க டாலரை நம்பி முதலீடு செய்து மக்களை ஏமாற்றி கொள்ளை அடித்து சம்பாதிச்சவன் முதல் எகாதிபத்த்ய முறையில் ஒவ்வொரு நாட்டின் ஆணிவேரான கலாச்சாரங்களை அழித்த அமெரிக்காவிற்கு பொருளாதார மற்றும் வள அழிவு காலம் தொடங்கிவிட்டது . இனிமேலாவது டாலரை மறந்து வேறு பணத்தை மாற்றிக்கொள்ளவில்லையானால் அனைவருக்கும் மரண அடித்தான் . இது இயற்க்கை நியதி இறைவனின் தீர்ப்பு.

பதிவு செய்தவர்: இந்தியன்
பதிவு செய்தது: 08 Nov 2009 6:01 am
எல்லோரும் இந்தியா திரும்பினா அமெரிக்கன் சந்தோச படுறதுல நாயம் இருக்கு ... நீ எதுக்கு? .... ஏற்கனவே நம்ப நாட்டுல வேலை இல்லா திண்டாட்டம் இருக்கு என்னும் அதிகரிகனுமா... மடையா

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India