Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » தமிழகம் » முழு விபரம்
தொடரும் கன மழை - அணைகள், ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வரும் தொடர் மழையால் அணைகள், ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

சென்னையில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் அதிக அளவில் உயர்ந்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் முழு நீர்மட்ட அளவு 24 அடி. நேற்று நீர்மட்டம் 10.70 அடியாக இருந்தது. இன்று 12 அடி ஆகி இருக்கிறது. நேற்று ஏரிக்கு விநாடிக்கு 1377 கன அடி தண்ணீர் வந்தது. இன்று விநாடிக்கு 2153 கன அடியாக அதிகரித்துள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு நேற்று 843 மில்லியன் கன அடி. இன்று 1029 மில்லியன் கன அடி. மழை அளவு 140 மில்லி மீட்டர்.

புழல் ஏரியின் முழு நீர் மட்ட அளவு 21.20 அடி. இன்று காலை நிலவரப்படி 9.41 அடியாக இருக்கிறது. நீர் வரத்து நேற்று 301 கன அடி. இன்று 696 கன அடி. தண்ணீர் இருப்பு 1181 மில்லியன் கனஅடி. மழை அளவு 145 மி.மீ.

பூண்டி ஏரிக்கு இன்று 1025 கன அடி தண்ணீர் வருகிறது. நேற்று 526 கன அடிதான் வந்தது. நீர் இருப்பு 1229 மில்லியன் கன அடி. நீர் மட்டம் 27.50 அடி. மொத்த உயரம் 35 அடி. மழை அளவு 71 மி.மீ.

வீராணம் ஏரியில் 589 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. உயரம் 15.60 அடி. இன்றைய நீர் மட்டம் 11.10 அடி. மழை அளவு 35 மி.மீ.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: சந்தோஷ் ச
பதிவு செய்தது: 08 Nov 2009 11:00 am
Are you only concerned about the செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, வீராணம் ஏரி If you say you didn't get details of others then its your fault..!!! Please All new papers open your eyes out of the City, go to rest of TN and gather news.. We are reading thats tamil that it would be different from others, if you are baout to copy paste same as others please don't publish for the increasing Ticking rate in internet

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India