ஐ.நா: இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த மக்களில் 90 ஆயிரம் பேர் தங்களின் சொந்த வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகள் பிரிவு ஹைகமிஷனர் ஆன்ட்ரெஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்
இலங்கையில் போர் உச்சகட்டம் அடைந்த சமயத்தில் சுமார் இரண்டு லட்சத்து 74 ஆயிரம் பேர் தங்கள் சொந்த வீடுகளில் இருந்து இடம் பெயர்ந்தனர்.
அவர்களை, மீண்டும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணிகளை இலங்கை அரசு தற்போது துரிதப்படுத்தியுள்ளது. கடந்த 2 வாரங்களில் மட்டும் 39 ஆயிரம் பேர் சொந்த வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
யாழ், முல்லைத்தீவு, திரிகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலானவர்கள் திரும்பிவிட்டனர். பொலன்னருவா மாவட்டத்திற்கும் சிறிதளவில் மக்கள் சென்றுவிட்டனர்.
இத்துடன், சுமார் 16 ஆயிரத்து 500 பேர் முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.