Thats tamil

clear
clear
clear
  BSE  17,021.85 +236.20   NSE  5052.45 +63.45   RS/$ 46.25 -0.16  at:16:10 Hrs (IST) Nov 20
clear
 செய்திகள்
  இலக்கியம்
  புக்மார்க்ஸ்
  வாகனங்கள்
  காமசூத்ரா
  சினிமா
  ஆசிரியர் பக்கம்
  கேலரி
  வீடியோ
  Font Help
  Twitter thatsTamil Twitter
 தமிழகம்
   இந்தியா
   உலகம்
   இலங்கை
   விளையாட்டு
   வர்த்தகம்
   கோப்புகள்
முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » முழு விபரம்
அடுத்தாண்டில் 7% பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்- பிரதமர் நம்பிக்கை

Manmohan singh
டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டில் இது 7 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு பருவ மழை பொய்க்காமல் இருந்தால்தான் 7 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று இந்திய பொருளாதார மாநாடு நடந்தது. அதைத் தொடங்கி வைத்து பிரதமர் பேசுகையில், உலகப் பொருளாதார சீர்குலைவை இந்தியா திறம்பட சமாளிக்க முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பிற நாடுகளை விட இந்தியா இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டது.

நடப்பு நிதியாண்டில் நாம் பருவமழை பொய்த்தது, விவசாய வளர்ச்சிக் குறைவு ஆகியவை காரணமாக பல மோசமான விளைவுகளை சந்திக்க நேர்ந்தது. இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்.

அதேசமயம், பொருளாதாரம் ஏற்றப் பாதைக்குத் திரும்பி வருவதற்கான அறிகுறிகள் சிறப்பாக உள்ளன. மேலும், அடுத்த ஆண்டு பருவ மழை பொய்க்காமல் இருந்தால், நம்மால் 7 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வளர்ச்சியை காண முடியும் என்றார் சிங்.

User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: நண்பர் நக்கீரன்
பதிவு செய்தது: 08 Nov 2009 10:13 pm
நான் இதுவரை கண்டதில் இந்த காங்கிரஸ் ஆட்சி மிக சிறந்த ஆட்சி என்று கருதுகிறேன்.

[ Post Comments ]
 
 
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Opinion Poll

மேலும் கருத்துகணி்ப்பு...   
thatstamil
thatstamil
thatstamil
thatstamil
Recommended Links
     Become fans of Namitha, Trisha, Katrina, Deepika, Hrithik Roshan      Make Like Minded Friends      SMS Updates      Astrology      Chat      RSS      Jobs      Book your Domains      Explore India