clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

ஏழை குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை

வியாழக்கிழமை, நவம்பர் 12, 2009, 10:16[IST]
Vote this article
Up  
Down  


பெங்களூர்: இருதயம் தொடர்பான பிரச்னைகள் உள்ள ஏழை குழந்தைகளுக்கு பெங்களூரில் உள்ள ஸ்ரீசத்ய சாய் உயர் மருத்துவ அறிவியல் நிறுவனம் சார்பில் இலவசமாக அறுவை சிகிச்சை நடத்தப்படுகிறது.

இருதய கோளாறுள்ள குழந்தைகளின் ஏழை பெற்றோர், மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ள முடியாத காரணத்தால் சிகிச்சையை தாமதப்படுத்தி வருபவர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுதொடர்பான விவரங்கள் பெற, கீழ்கண்ட முகவரியை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

ஸ்ரீசத்ய சாய் இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் மெடிக்கல் சயின்சஸ், இபிஐபி ஏரியா, ஒயிட்ஃபீல்டு, பெங்களூர், கர்நாடகா - 560066.

080 28411500 என்ற தொலைபேசி எண் அல்லது adminblr@sssihms.org.in என்ற இ-மெயில் மூலமாகவும் விவரங்களை கேட்டறியலாம்.

பேக்ஸ் எண்: 91 080 28411502



User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்