ஜகார்தா: இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியி்ல உள்ள தென் சுலவேசி மாகாணத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.1 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் சேதம ஏதும் ஏற்படவில்லை.
புலுகும்பா என்ற இடத்துக்கு 163 கி.மீ. தொலைவில் நிலத்துக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் காலை 5 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.