clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

நேபாளம்: அழகிகளை வைத்து விபச்சாரம் செய்த இந்தியர் கைது

வியாழக்கிழமை, நவம்பர் 12, 2009, 10:13[IST]
Vote this article
Up  
Down  


காத்மாண்டு: மனீஷ் சர்மா என்ற இந்தியர், நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் அழகிகளை வைத்து விபச்சாரத்தை பெரிய அளவில் செய்து வந்ததை நேபாள நாட்டு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் விபச்சாரம் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் சீன விபச்சாரக் கும்பலை அந்த நாட்டு போலீஸார் கண்டுபிடித்து கைது செய்தனர்.

இந்த நிலையில், இந்தியர் ஒருவர் நடத்தி வந்த விபச்சார நெட்வொர்க் அம்பலமாகியுள்ளது.

இதுகுறித்து காத்மாண்டு எஸ்.பி. நபராஜ் சில்வால் கூறுகையில், இந்தியா, ரஷ்யா, சீனா, பாலஸ்தீனம், சில ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த விபச்சார அழகிகள் காத்மாண்டுக்கு வந்து தொழில் செய்வதை பெருமளவில் விரும்புகிறார்கள்.

இந்த நிலையில் இந்தியரான மனீஷ் சர்மா என்பவர் ஜான் என்ற பெயரில் இங்கு விபச்சார தொழிலை நடத்தி வருவதைக் கண்டுபிடித்துள்ளோம்.

மிகப் பெரிய அளவில் காத்மாண்டுவில் விபச்சாரத்தை நடத்தி வந்துள்ளார் சர்மா. ஒரு இணையத் தளத்தைத் தொடங்கி அதன் மூலமாக தனது வாடிக்கையாளர்களை அவர் திருப்திப்படுத்தி வந்துள்ளார்.

இவருக்கு காத்மாண்டு தவிர டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, கோவா ஆகிய இடங்களிலும் விபச்சார நெட்வொர்க் உள்ளது.

பெரும் வர்த்தகர்களை அணுகும் இவர், காத்மாண்டுவில் உல்லாசமாக இருக்க அழகிகளை சப்ளை செய்வார். இதற்காக ரூ. 1 லட்சம் வரை பணம் வசூலிப்பார். வாடிக்கையாளர்கள் அழகிகளுடன் உல்லாசமாக இருப்பதற்கு எந்தவிதமான இடையூறும் இல்லாத அளவுக்கு பக்காவாக ஏற்பாடு செய்து கொடுப்பது இவரது கலை. இதனால் இவரிடம் ஏகப்பட்ட பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

நவம்பர் 9ம் தேதி சர்மாவின் வாடிக்கையாளர்கள் இருவரை குறி வைத்துப் பிடித்தோம். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட தகவல்கள் கிடைத்தன என்றார்.

சென்னை 'ரேட்' நிலவரம்...

சர்மாவின் இணையதளத்தில் ஒவ்வொரு ஊருக்கும் அழகிகளின் ரேட் விவரத்தை அப்பட்டமாக போட்டு வைத்துள்ளார்.

வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப அழகிகள் உரிய இடத்திற்கு வரும் வசதியும் இதில் உண்டாம்.

சென்னையில் அழகிகளுடன் 2 மணி நேரம் உல்லாசமாக இருக்க ரூ. 15,000 ரேட் நிர்ணயித்துள்ளார் சர்மா. இதுதவிர 4 மணி நேரத்திற்கு ரூ. 18,000, 6 மணி நேரத்திற்கு ரூ. 24,000, 12 மணி நேரத்திற்கு ரூ. 28,000 என ரேட் போட்டு வைத்துள்ளார்.

கம்பானியன் என்ற பெயரில் இப்படி விபச்சாரத்தை இன்டர்நெட் மூலமாக பகிரங்கமாகவே சர்மா செய்து வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதவிர கல்லூரி மாணவிகள் என்றால் ரூ. 25,000மும், மாடல் அழகிகள் என்றால் ரூ. 50,000மும், பிரபலங்கள் என்றால் ரூ. 1 லட்சம் வரையிலும் 'நன்கொடை' வசூலிக்கப்படுமாம்.



User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்