clear
clear
clear
முதல் பக்கம் » செய்திகள் » விளையாட்டு » முழு விபரம்
நீண்ட காலமாய் விளையாடுவோர்..16வது இடத்தில் சச்சின்

Tendulkar
டெல்லி: ரொம்ப கலமாக விளையாடும் கிரிக்கெட் வீரர்களின் வரிசையில் சச்சின் டெண்டுல்கருக்கு 16வது இடம் கிடைத்துள்ளது.

சச்சின் வசம் தற்போது ஏராளமான கிரிக்கெட் உலக சாதனைகள் உள்ளன. ஆனால் அவரால் ஒரே ஒரு சாதனையை மட்டும் நிச்சயம் செய்ய முடியாது. அது நீண்ட காலமாக கிரிக்கெட் ஆடும் வீரர் என்ற உலக சாதனை.

அந்த சாதனை தற்போது இங்கிலாந்து முன்னாள் வீரர் வில்பிரட் ரோட் என்பவரிடம் உள்ளது. அந்த வீரர் கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடியுள்ளார்.

நீண்ட காலமாக கிரிக்கெட் ஆடும் வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு 16வது இடம்தான் கிடைத்துள்ளது. நாளையுடன் சச்சின் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

User Comments
[ Post comments ]


இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !

 
 
  மேலும் செய்திகள்
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்