clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

ரயிலை குண்டு வைத்துத் தகர்த்தனர் மாவோயிஸ்டுகள் - 2 பேர் பலி

வெள்ளிக்கிழமை, நவம்பர் 20, 2009, 9:55[IST]
Vote this article
Up  
Down  


கொல்கத்தா: ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் மாவோயிஸ்டுகள் வைத்த குண்டு வெடித்ததில், ரயில் தடம் புரண்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 47 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அந்தப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

டாடா - பிலாஸ்பூர் பாசஞ்சர் ரயில் நேற்று இரவு மனோஹர் - பசோய்டா ரயில் நிலையங்களுக்கு இடையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில் ரயிலின் எட்டு பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 2 பயணிகள் கொல்லப்பட்டனர். 47 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ரயில்வ அமைச்சர் மமதா பானர்ஜி கூறுகையில், இந்த ரயிலில் மொத்தம் 10 பெட்டிகள் இருந்தன. இதில் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. 3 பெட்டிகள் சேதமடைந்துள்ளன. என்ஜினும் சேதமடைந்துள்ளது.

தலைகுப்புற விழுந்த ஒரு பெட்டியிலிருந்து 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 47 பேர் காயமடைந்துள்ளனர். 6 பயணிகள் இன்னொரு பெட்டிக்குள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் இதுவரை 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

ரயில் தண்டவாளத்தைத் தகர்க்கும் நோக்கில் இந்த குண்டுகள மாவோயிஸ்டுகள் வைத்துள்ளனர். இதுதவிர யாரும் மீட்புப் பணிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக மேலும் 3 அல்லது நான்கு இடங்களில் குண்டுவெடிப்புகளை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர் என்றார் மமதா.



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Rajan
பதிவு செய்தது: 20 Nov 2009 8:40 pm
Instead, Corrupted politicians are busy in corrupting the country and sending money to Swiss bank.

பதிவு செய்தவர்: Rajan
பதிவு செய்தது: 20 Nov 2009 8:40 pm
Stop it here. There is a limit for Patience. Patience is running out. All anti-social elements need to be rooted out from our society. The ruling central government has to take some strong steps to save the people from Nexals. Which ever the State Congress ruled for many years, Nexals created there because of poor administration and Corruption. Out Corrupted politicians are never bothered to serve to remove the poverty among the poor.

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்