clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில் போட்டி- ஜெ

வெள்ளிக்கிழமை, நவம்பர் 20, 2009, 17:05[IST]
Jayalalitha
Vote this article
Up  
Down  


சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கடந்த முறை நடந்த பர்கூர், ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர், கம்பம், இளையாங்குடி இடைத் தேர்தலை அதிமுகவும், மதிமுகவும் புறக்கணித்தன. இதனால் கூட்டணிக் கட்சிகளாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை அதிமுகவை விமர்சித்து வெளியேறி தனியாக போட்டியிட்டன.

இந்த நிலையில் தற்போது திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக போட்டியிடும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த தேர்தலை அதிமுக புறக்கணிக்கக் காரணம் தேர்தல் முறைகேட்டைக் கண்டித்துத்தான். எனவே திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் தொகுதியில் கடந்த தேர்தலில் அதிமுக போட்டியிட்டு வென்றது. வந்தவாசி தொகுதியில் திமுக வென்றது.

இந்த இரு தொகுதிகளிலும் இம்முறை அதிமுகவும், திமுகவும் போட்டியிடும் என்பதால் நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

&13;


User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: தாம்பரம் ஸ்டார்
பதிவு செய்தது: 06 Dec 2009 12:40 pm
வரும் இடைத்தேர்தலில் தி.மு.க.தோற்கும் அ.தி மு.க. வெல்லும் என்பதில் துளி அளவும் ஐயமில்லை ,விண்ணை முட்டும் விலை உயர்வு கொலை கொள்ளையோ ,கொள்ளையோ, இதற்குமேல் தமிழக மக்கள் தங்காமல் பொங்கி எழுவார்கள் ,என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை ,காசு கொடுத்து ஓட்டுவாங்கி ஏமாந்த காலம் போயி கட்டையால் மக்கள் அடிக்கும் காலம் வந்து விட்டது . மக்களே விழித்திருங்கள் .வெற்றி என்றென்றும் .நல்லவர்களுக்கே என்பதில் சந்தேகம் இல்லை.நன்றி ,தாம்பரம் ஸ்டார் .

பதிவு செய்தவர்: PAKISTAN
பதிவு செய்தது: 25 Nov 2009 5:36 pm
எப்போது இருந்து THIRUSENTHUR .VANTHAVASI SRILANKAVIN KADDUPADDIL வந்தது NIKAL KODUTHIRKALA இல்லை அவர்கள் PIDITHARKALA ஏன் ENRAL ILANKAI NEWS KKU KIL IRUKIRATHU

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்