clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

இலங்கை தூதரக முற்றுகை போராட்டம்-சிபிஎம்

வெள்ளிக்கிழமை, நவம்பர் 20, 2009, 15:28[IST]
Vote this article
Up  
Down  


பரமக்குடி: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதலை கண்டித்து இலங்கை தூதரகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் கூறினார்.

பரமக்குடியில் மீன் பிடித்தொழில் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் செயலாளர் என்.வரதராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு ஒரு முடிவு காண இலங்கை அரசுடன் மத்திய அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

மீன் பிடித்தொழிலை ஒழுங்குபடுத்தல் என்ற பெயரில் மத்திய அரசு சட்டம் ஒன்றை கொண்டு வர உள்ளது. மீனவர்களுக்கு எதிரான சட்டத்தை மத்திய அரசு கைவிட முன் வரவேண்டும்.

மீனவர்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக டிசம்பர் 2ம் தேதி ராமேஸ்வரத்தில் மக்களை திரட்டி கோரிக்கை மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். ஜனவரி மாதம் இலங்கை தூதரகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: மன்னன்
பதிவு செய்தது: 21 Nov 2009 4:51 pm
இலங்கை தூதரகம் சென்னைக்கு தேவையே இல்லை,பண விரயம். இலங்கை தமிழருக்கு இந்திய பிரஜா உரிமை கொடுத்தால் அவர்களுக்கும் தேவை வராது,சதி வேலைகளுக்கு மட்டுமே பயன்படும், நிர்மூலமாக்க வேன்றும்

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!