clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

கருணாநிதியைக் கண்டித்து போஸ்டர்கள் - பரபரப்பு

வெள்ளிக்கிழமை, நவம்பர் 20, 2009, 9:20[IST]
Poster
Vote this article
Up  
Down  


மதுரை: விடுதலைப் புலிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படவில்லை. அதனால்தான் இன்று நாடு நாடாக இலங்கைத் தமிழர்கள் அலையும் நிலை ஏற்பட்டு விட்டது என்று முதல்வர் கருணாநிதி, யாருக்குத் தெரியும் இந்த மெளன வலி என்ற தலைப்பில் முரசொலியில் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தமிழின உணர்வாளர்கள் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், ஈழ விடுதலைப் போரை கொச்சைப்படுத்தும் கலைஞரே, உங்கள் அறிக்கை மெளனத்தின் வலியா, துரோகத்தின் மொழியா என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழின உணர்வாளர்கள், மதுரை என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டரில் பெரியார் படமும் இடம் பெற்றுள்ளது.

இந்தப் போஸ்டர்களை பெரியார் தி.க. அல்லது நாம் தமிழர் அமைப்பினர் ஒட்டியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த போஸ்டர்களை போலீஸார் உடனடியாக அகற்றி விட்டனர்.



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: Raman
பதிவு செய்தது: 13 Dec 2009 10:06 am
india has a strong base in Italy.

பதிவு செய்தவர்: பிரானே தமிழன்
பதிவு செய்தது: 01 Dec 2009 9:37 pm
சீனா இலங்கையிடம் எதிர்பார்ப்பது கச்சத்தீவில் ஒரு இராணுவத் தளம் அமைக்கும் உதவியைத் தான்! கிட்டத்தட்ட இதற்கான அனுமதியும் சீனாவுக்குக் கிடைத்து விட்டதாகவும், வருகிற 2010 ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பருக்குள் அங்கு இராணுவத் தளத்தையும் சீனா நிறுவி விடும் என இந்திய உளவு அமைப்பான 'றோ' மத்திய அரசை எச்சரித்திருக்கிறது.

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்