clear
clear
clear
x
முதல் பக்கம் » செய்திகள் » முழு விபரம்

சேட்டைகள் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி: செக்ஸ் அர்ச்சகர் வாக்குமூலம்

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 22, 2009, 15:18[IST]
Vote this article
Up  
Down  


காஞ்சிபுரம்: பல ஆண்டுகளாக கோவிலில் காம லீலைகளை அரங்கேற்றி வந்த செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன், தனது சேட்டைகள் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது என்பதை போலீசிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

காஞ்சிபுரம், மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட ஆபாச அர்ச்சகர் தேவநாதனை காஞ்சீபுரம் போலீசார் கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட தேவநாதனை போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. தேவநாதன் தனது வாக்குமூலத்தில் கூறி்யிருப்பதாவது:

காஞ்சிபுரம் தான் எனது பூர்வீகம். எனக்கு 35 வயதாகிறது. கங்கா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். 5ம் வகுப்பு வரை படித்துள்ளேன். சிறு வயதில் எனது தந்தைக்கு துணையாக கோவிலுக்கு வரும்போதே, அங்கு வரும் பெண்களிடம் கனிவாக பேச கற்றுக்கொண்டேன்.

எனது 15 ஆண்டு அனுபவத்தில் பெண்களின் கண்ணை பார்த்தவுடன் அவர்களின் மனதில் உள்ளது என்ன என்பதை அறிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு ஏற்பட்டுவிட்டது.

குழந்தை வரம் கேட்டு வரும் பெண்கள் என்றால் எளிதில் வேறு ஆண்களிடம் சிக்க மாட்டார்கள். குழந்தைக்கு சுகமில்லை என்று வருவோரும், கணவனுக்கு உடல்நலமில்லை என்று வரும் பெண்களிடம்மும் ஒருமுறைக்கு இரண்டு முறை மனம் உருக பேசினால் தானாக வழிக்கு வந்து விடுவார்கள்.

ஆரம்பத்தில் திருமணத்திற்கு முன்பு ஒரு சில பெண்களிடம் அவர்களது வீட்டிற்கு தோஷம் கழிப்பதாக கூறி சென்று உல்லாசம் அனுபவித்துள்ளேன். சில சமயம் என்னிடம் வலையில் விழுந்த பெண்களை லாட்ஜுகளுக்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருப்பேன்.

அனைவரிடமும் சகஜமாக பேசும் பெண்களிடம் அழகை வர்ணித்து வலையில் விழ வைப்பேன். பெரும்பாலான பெண்களிடம் அம்பாள் போல லட்சணமாக இருக்கிறீர்கள். இளமை குன்றாமல் என்றும்16ஆக இருக்க வேண்டுமானால் கோவில் கருவறையில் இருந்தபடி இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைவார்த்தை கூறி எனது வழிக்கு வரவழைப்பேன்.

சிலர் கோவிலில் வேண்டாம் என்று பயந்தால் அவர்களது வீட்டுக்கும் அருகில் உள்ள லாட்ஜுக்கும் அழைத்துச்செல்வேன். திருமணத்திற்கு பிறகு இதுபோன்ற செயல்களை ஓரளவு குறைத்துக்கொண்டேன்.

2 வருடங்களுக்கு முன்பு சைனா செல்போன் ஒன்று வாங்கினேன். அதில் வீடியோ மற்றும் கேமரா வசதி இருந்தது. கோவிலுக்கு வரும் 99 சதவீத பெண்கள் சேலை அணிந்துதான் வருவார்கள். அவர்கள் குணிந்து சாமி கும்பிடும்போது யாருக்கும் தெரியாமல், ஓரமாக நின்று அவர்களை ஆபாசமாக படம் எடுப்பேன். அந்த படங்களை ஓய்வு நேரங்களில் பார்த்து ரசிப்பேன்.

எனது நண்பர்கள் சிலரிடம் இருந்து ஆபாச படங்களை செல்போன் மூலம் பெற்று பார்த்து ரசிப்பேன். என்னதான் பெண்களை அனுபவித்திருந்தாலும் செல்போனில் பார்ப்பதில் தனி சுகம் கிடைத்தது. இதனால் நாமும் பெண்களுக்கு தெரியாமல் படம் எடுக்க வேண்டும் என்று எண்ணினேன்.

அதன்படி கோவிலில் என்னுடன் உல்லாசத்தில் ஈடுபடும் பெண்களுக்கு தெரியாமல் கோவில் விளக்கு பின்புறம் செல்போனை மறைத்து வைத்தேன். பெண்களை மயக்கி கருவறைக்குள் அழைத்து வந்து காம வேலைகளில் ஈடுபட்டேன்.

இதுபோல கஷ்டப்பட்ட பெண்கள், நடுத்தர குடும்பத்து பெண்கள், பணக்கார வீட்டு பெண்கள் என்று 8 பேரை அனுபவித்து படம் எடுத்தேன். அதை தனிமையில் இருக்கும் போது பார்த்து ரசி்ப்பேன். சில பெண்களை லாட்ஜுகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவிக்கும்போதும் படம் எடுத்துள்ளேன்.

ஒரு பெண் தன்னுடைய குழந்தைக்கு தொடர்ந்து நோய் தாக்குகிறது என்று கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். குழந்தைக்கு நோய் சரியாக வேண்டுமானால் பள்ளியறையில் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறினேன். அவளை உள்ளே அழைத்து செல்வதற்கு முன்பாக செல்போனை மறைத்து வைத்தேன்.

அப்போது திடீரென செல்போன் தவறி தீர்த்த குடத்திற்குள் விழுந்து விட்டது. அந்தப்பெண்ணிடம் சில்மிஷம் செய்ய மனமில்லாமல் விட்டு விட்டேன். தண்ணீருக்குள் விழுந்த செல்போனை எடுத்து வெயிலில் காய வைத்தேன். அது சரியாகவில்லை.

எனவே அதை பழுது பார்ப்பதற்காக நண்பர் செந்தில்குமாரின் செல்போன் சர்வீஸ் கடையில் கொடுத்தேன். அதில் உள்ள மெமரி கார்டை எடுக்க மறந்து விட்டேன். அதை சரி செய்து விட்டு பார்த்தபோது நான் கோவிலில் வைத்து எடுத்த ஆபாச படங்கள், வெளிச்சத்துக்கு வந்து விட்டிருந்தது.

இதுபற்றி செந்தில்குமார் ஒன்றும் சொல்லவில்லை. செல்போனை சரி செய்து கொடுக்கும்போது சிரித்துக் கொண்டே தந்தார். அப்போது அர்த்தம் புரியவில்லை. அதன் பிறகு தான் எனது செல்போனில் இருந்த ஆபாச படத்தை அவர் காப்பி செய்து இணைய தளங்களில் பரவவிட்டது தெரிந்தது.

நான் கருவறையில் பெண்களுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட விவகாரம் பத்திரிகைகளில் வெளி வந்ததால் தலைமறைவானேன். கோவிலில் நான் செய்த கெட்ட காரியத்துக்கு பகவான் என்னை கடுமையாக தண்டித்து விட்டார். என்னால் எனது மனைவி குழந்தைகளும் உறவினர்களும் அவதிப்பட்டதால் கோர்ட்டில் சரண் அடைந்தேன்.

என் கணவர் அப்பாவி ...

இதற்கிடையே, எனது கணவர் அப்பாவி, அவர் மீது பொய் வழக்குப் போட்டுள்ளனர் என்று தேவநாதனின் மனைவி கங்கா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது...

எனக்கும், தேவநாதனுக்கும் 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் ஆனது முதல் இன்று வரை என் கணவர் என்னை அன்பாகத் தான் பார்த்துக் கொண்டார்.

அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. வெகுளியாக எல்லாருடனும் சகஜமாக பழகுவார். அதே போலதான் கோவிலுக்கு வரும் பெண்களிடமும் சகஜமாக பழகி உள்ளார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடவுளிடம் தங்கள் குறைகளை கூறுவார்கள். அவரும் ஆறுதலாக பதில் அளிப்பார்.

எங்களுக்கு நேரம் சரி இல்லை. பகவான் சோதித்தாலும் எங்களை கைவிடமாட்டார். போலீசார் என் கணவர் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.

என் கணவர் அப்பாவி, நிரபராதி, அவருக்கு ஒன்றும் தெரியாது. போலீசார் என் கணவரை மிரட்டுகிறார்கள். பகவானின் செயலால் என் கணவர் விரைவில் விடுதலையாவார் என்றார் கங்கா.



User Comments
[ Post Comments ]
பதிவு செய்தவர்: செல்வா
பதிவு செய்தது: 14 Dec 2009 9:30 pm
அவனை போல் பல அர்ச்சகர்கள் இருக்கிறார்கள்

பதிவு செய்தவர்: நலம் virumbe
பதிவு செய்தது: 13 Dec 2009 12:33 am
தன மனைவி மற்றும் குழந்தைகள் வருங்காலம் பற்றி தேவநாதன் நினைத்திருக்கவேண்டும் .அவரின் செயலுக்கு அவரது குடும்பம் அவதிபடுகிறது

[ Post Comments ]
  மேலும் செய்திகள்
Live Chat with a Doctor
டாக்டருடன் பேசுங்கள்!
 வீடியோ
  இலக்கியம் & லைப் ஸ்டைல்